Thaazhiyadhu kaikkola
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Thaazhiyadhu kaikkola thaavi uri yaeri
navaneedha madhu dhaan thirudi
aazhi thanil yaedhum ariyaadhavanai pol urangum
aravindhan chella maruga
vaazhi ena un naamam vaay niraiya cholli un
vayamaagi ninra paerai
oozhiyezhum kaalaththu oru saedham anugaadhu
un kai vel thaangi nirka
vaeliyadhu nadu pottu vinai pinnae thodaraadhu
viraindhu nee kaakka vaenum
neeliyaval sari bagamaayinaan netri kann
neruppil pirandha muruga - un
kaalilani thandaiyin gala galenum naadhaththil
kavalai marakka vaippaay - mayil
peeliyadhu oli veesum pirai netri prakaasa
paerazhagae Sivashankara
தாழியது கைக்கொளத் தாவி உறியேறி
நவநீத மது தான் திருடி
ஆழிதனில் ஏதுமறியாதவனைப் போல் உறங்கும்
அரவிந்தன் செல்ல மருகா
வாழி என உன் நாமம் வாய் நிறையச் சொல்லி உன்
வயமாகி நின்ற பேரை
ஊழியெழும் காலத்து ஒரு சேதம் அணுகாது
உன் கை வேல் தாங்கி நிற்க
வேலியது நடுபோட்டு வினை பின்னே தொடராது
விரைந்து நீ காக்கவேணும்
நீலியவள் சரிபாகமாயினான் நெற்றிக்கண்
நெருப்பில் பிறந்த முருகா - உன்
காலிலணி தண்டையின் கலகலெனும் நாதத்தில்
கவலை மறக்க வைப்பாய் - மயில்
பீலியது ஒளி வீசும் பிறை நெற்றிப் பிரகாச
பேரழகே சிவசங்கரா
留言