Thaal meedhu thalai vaiththu
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Thaal meedhu thalai vaiththu thozha vaendum baba - un
thol meedhu thalai saayththu azha vaendum baba
vaal ponra thuyar ennai vaattidum podhu
varundhaadhae ena cholla nee vaendum baba
kaalangal karaindhodi kazhiginradhae - en
karumangal kuraiyaamal erikkinradhae
sogangal sumaiyaagi thodarginradhaae - nee
sollum oru vaarththaikku manam yaengudhe
yaar nanbar yaar uravu theriyavillaiyae
vaerodum pagai satrum kuraiyavillaiyae
poraadum vaazhvenakku mudiyavillaiyae
porundhaadha vaazhvedharku puriyavillaiyae
palarodu pirandhirundhum payan illaiyae
parivenakku nee kodukka varavilaiyae
malar ponra manam enakku amaindhirundhaalum
manam veesum nilaithannai tharavillaiyae
தாள் மீது தலை வைத்து தொழ வேண்டும் பாபா - உன்
தோள் மீது தலை சாய்த்து அழ வேண்டும் பாபா
வாள் போன்ற துயர் என்னை வாட்டிடும் போது
வருந்தாதே எனச்சொல்ல நீ வேண்டும் பாபா
காலங்கள் கரைந்தோடி கழிகின்றதே - என்
கருமங்கள் குறையாமல் எரிக்கின்றதே
சோகங்கள் சுமையாகி தொடர்கின்றதே - நீ
சொல்லும் ஒரு வார்த்தைக்கு மனம் ஏங்குதே
யார் நண்பர் யார் உறவு தெரியவில்லையே
வேரோடும் பகை சற்றும் குறையவில்லையே
போராடும் வாழ்வெனக்கு முடியவில்லையே
பொருந்தாத வாழ்வெதற்கு புரியவில்லையே
பலரோடு பிறந்திருந்தும் பயன் இல்லையே
பரிவெனக்கு நீ கொடுக்க வரவில்லையே
மலர் போன்ற மனம் எனக்கு அமைந்திருந்தாலும்
மணம் வீசும் நிலைதன்னை தரவில்லையே
Comments