Thondu kizhavanivan
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Thondu kizhavanivan Shankaran - aanaal
thondu seivadhil kumaran
maa geethai sonna kannan - ivanukku
madiyil thavazhum kuzhandhai
gnaanam thandha guru kandhan - ivanukku
mona nilaiyil pillai
ulagaththu uyirgalukkivanae - than
ullaththil urugida koduththaan
sila pala aavalinaal thaanae
jeevanaay karu kondaan
thaan irai enrarindhum ulagil
thaanae irangi vandhaan
nee irai enruraiththu namakku
niththiya vaazhvu aliththaan
தொண்டு கிழவனிவன் சங்கரன் - ஆனால்
தொண்டு செய்வதில் குமரன்
மாகீதை சொன்ன கண்ணன் - இவனுக்கு
மடியில் தவழும் குழந்தை
ஞானம் தந்த குரு கந்தன் - இவனுக்கு
மோன நிலையில் பிள்ளை
உலகத்து உயிர்களுக்கிவனே - தன்
உள்ளத்தில் உருகிட கொடுத்தான்
சில பல ஆவலினால் தானே
ஜீவனாய் கருக் கொண்டான்
தான் இறை என்றறிந்தும் உலகில்
தானே இறங்கி வந்தான்
நீ இறை என்றுரைத்து நமக்கு
நித்திய வாழ்வு அளித்தான்
Comments