Thodudaiya seviyanavan
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Thodudaiya seviyanavan dhevar thuyar kaettu adhai
theerkka oru maarkkam vaendi
kaadudaiya sudalaiyadhan podiyaniyum netrithanil
kann onru thotruviththu
peedudaiya baalanaiyae pera vaendi theepporigal
peidhanan mazhai ennavae
needu vayal soozhu saravana nadhiyin thaamaraiyil
nirkavae madhalaigalaay
paadudaiya sooranavan paraman magan thannaiyae
pagaiththanan vidhi mudiyavae
naadudaiya thamizh mozhiyin naayaganaam murugan kai
vaelaal uyir mudiyavae
aaduginra maa mayilum asai kodiyil saevalumaay
annalidam avan paniyavae
eedu ilaa Sivashankar enum dheivam arul seidha
irai murugu pugazh poligavae
தோடுடைய செவியனவன் தேவர் துயர் கேட்டு அதை
தீர்க்க ஒரு மார்க்கம் வேண்டி
காடுடைய சுடலையதன் பொடியணியும் நெற்றி தனில்
கண் ஒன்று தோற்றுவித்து
பீடுடைய பாலனையே பெற வேண்டி தீப்பொறிகள்
பெய்தனன் மழை என்னவே
நீடு வயல் சூழு சரவண நதியின் தாமரையில்
நிற்கவே மதலைகளாய்
பாடுடைய சூரனவன் பரமன் மகன் தன்னையே
பகைத்தனன் விதி முடியவே
நாடுடைய தமிழ் மொழியின் நாயகனாம் முருகன் கை
வேலால் உயிர் முடியவே
ஆடுகின்ற மாமயிலும் அசை கொடியில் சேவலுமாய்
அண்ணலிடம் அவன் பணியவே
ஈடுஇலா சிவசங்கர் எனும் தெய்வம் அருள் செய்த
இறை முருகு புகழ் பொலிகவே
Komentarai