Thiruppathiyil kallaaga
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Thiruppathiyil kallaaga ninraan
mannadiyil sollaaga vandhaan
thirumalaiyil udal kondu ninraan
mannadiyil thannuyirai vaiththaan
vaendiyadhai thiruppadhiyil kaettaal
virumbiyadhai mannadiyil tharuvaan
poojaithanai thirumalaiyil seidhaal
prasaadham mannadiyil tharuvaan
thiruppadhiyil ivan vaenkata naadhan
mannadiyil Sivashankara dhevan
thirumalaiyil malai yaera vaiththaan
mannadiyil mannae thalam enraan
thiruppadhiyil undiyalai saerththaan
mannadiyil paabangal theerththaan
thirumalaiyil kadai kannaal paarththaan
mannadiyil karam kondanaiththaan
thiruppadhiyil namai kaakka vaiththan
mannadiyil edhir vandhu ninraan
thirumalaiyil maunamozhi kondaan
mannadiyil aravurai paganraan
thiruppadhiyil avan thenral kaatru
mannadiyil avanae arul ootru
thirumalaiyil pushkarani theerththam
mannadiyil avan vadivam theeyaam
malaiyappan enbadhavan naamam
malaiyappan theruvil ivan vaasam
sridhaeviyaal idhaya naesan
srinagar kshethra nivaasan
thiruppadhiyai kaattum kai kaatti - ini
mannadiyin dhisaithaane kaattum
thirumalaiyil saerum perungkoottam
mannadiyil kadal alaiyaay modhum
திருப்பதியில் கல்லாக நின்றான்
மண்ணடியில் சொல்லாக வந்தான்
திருமலையில் உடல் கொண்டு நின்றான்
மண்ணடியில் தன்னுயிரை வைத்தான்
வேண்டியதைத் திருப்பதியில் கேட்டால்
விரும்பியதை மண்ணடியில் தருவான்
பூசைதனைத் திருமலையில் செய்தால்
பிரசாதம் மண்ணடியில் தருவான்
திருப்பதியில் இவன் வேங்கட நாதன்
மண்ணடியில் சிவசங்கர தேவன்
திருமலையில் மலை ஏற வைத்தான்
மண்ணடியில் மண்ணே தலம் என்றான்
திருப்பதியில் உண்டியலைச் சேர்த்தான்
மண்ணடியில் பாபஙகள் தீர்த்தான்
திருமலையில் கடைக்கண்ணால் பார்த்தான்
மண்ணடியில் கரம் கொண்டணைத்தான்
திருப்பதியில் நமைக்காக்க வைத்தான்
மண்ணடியில் எதிர் வந்து நின்றான்
திருமலையில் மௌனமொழி கொண்டான்
மண்ணடையில் அறவுரை பகன்றான்
திருப்பதியில் அவன் தென்றல் காற்று
மண்ணடியில் அவனே அருள் ஊற்று
திருமலையில் புஷ்கரணி தீர்த்தம்
மண்ணடியில் அவன் வடிவம் தீயாம்
மலையப்பன் என்பதவன் நாமம்
மலையப்பன் தெருவில் இவன் வாசம்
ஸ்ரீதேவியாள் இதய நேசன்
ஸ்ரீநகர் க்ஷேத்ர நிவாஸன்
திருப்பதியைக் காட்டும் கைகாட்டி - இனி
மண்ணடியின் திசைதானே காட்டும்
திருமலையில் சேரும் பெருங்கூட்டம்
மண்ணடியில் கடல் அலையாய் மோதும்
Comments