Thiruneeru Anindhavarkku
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
திருநீறு அணிந்தவர்க்கு இருபேறும் கிட்டி விடும்
திருநாமம் ஜபித்திருந்தால் தெய்வீகம் துலங்கிவிடும்
கதிர்காமக் கந்தனிவன் கழல்களிலே சரண் புகுந்தால்
காத்திட சங்கரனின் கை வேலே ஓடி வரும்
முகம் ஆறு கொண்டவனை முப்போதும் துதித்திருந்தால்
கரம் ஈராரும் சேர்ந்து கணக்கில்லா வரங்கள் தரும்
பொருளற்ற வாழ்வினிலும் புகழ் சிறந்து குவிந்து விடும்
அருள் பெற்ற உன் ஆன்மா ஐயனிலே கலந்து விடும்
Comments