Thiripuram eriththavan
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Thiripuram eriththavan iruvizhi kanal vizha
saravanaththilae udhiththa thaamaraiyae
aram valarththa naayagi anaiththeduththa podhilae
arumugaththodae ezhundha naanmaraiyae
thinai koduththa valliyai manamudiththu kollavae
ganapathiyai poojai seidha ilaiyonae
namanazhaikkum podhilae manamanakkum neerinai
udanaliththu ennai aatkolvaayae
sruthi layaththin isaivilae padhamasaiththu aadiyae
manam layikka vaiththidum Sivashankara
gadhi koduththu englai karaiyaetra vandhadhor
kalankaraiyae oh abayankara
vidhi vaguththa paadhaiyil midhi padaamal kaakkavae
vizhi suzhatri meettidum Sivashankara
vidhai padaiththa narpadham vilaivu thandha arpudham
kadhai padaikkum naayagamae Shankara
திரிபுரம் எரித்தவன் இருவிழிக் கனல் விழ
சரவணத்திலே உதித்த தாமரையே
அறம் வளர்த்த நாயகி அணைத்தெடுத்த போதிலே
அறுமுகத்தோடே எழுந்த நான்மறையே
தினை கொடுத்த வள்ளியை மணமுடித்து கொள்ளவே
கணபதியை பூஜை செய்த இளையோனே
நமனழைக்கும் போதிலே மணமணக்கும் நீரினை
உடனளித்து என்னை ஆட்கொள்வாயே
ஸ்ருதி லயத்தின் இசைவிலே பதமசைத்து ஆடியே
மனம் லயிக்க வைத்திடும் சிவசங்கரா
கதிகொடுத்து எங்களை கரையேற்ற வந்ததோர்
கலங்கரையே ஓ அபயங்கரா
விதிவகுத்த பாதையில் மிதி படாமல் காக்கவே
விழிசுழற்றி மீட்டிடும் சிவசங்கரா
விதை படைத்த நற்பதம் விளைவு தந்த அற்புதம்
கதை படைக்கும் நாயகமே சங்கரா
Comments