Therku thenral
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Therku thenral veesumpodhu
dhegam thoduvadhu needhaane
themmaangai naan kaetkumpodhu
thaenaay inippadhu needhaane
Shankara Siva Shankara
pullin nuniyil paniththuli vizhundhaal
theriyum vaanam needhaane
pookkalin vaasam paesumpodhu
veesum narumanam needhaane
Shankara Siva Shankara
nenjai allum chandhiran varugaiyil
konjum vellichcham needhaane
neela kadalalai modhum podhu
sidharum neer thuli needhane
Shankara Siva Shankara
kaalai kadhiravan sutruvadhaal varum
kaala kanidham needhaane
kavidhai paada vaarththai eduththaal
kaanum arththam needhaane
Shankara Siva Shankara
pillai kanavil ennudan vandhu
paesiya dhevan needhaane
paesaa nilaiyil mudhumaiyin amaidhiyil
pirakkum dheivam needhaane
shankaram enbadhu needhaane
saasvatham enbadhu needhaane
saththiyam enbadhu needhaane
thaththuvam enbadhu needhaane
chathurmarai enbadhu needhaane
dharisanam enbadhu needhaane
saaththiram enbadhu needhaane
ksheththiram enbadhu needhaane
abayam enbadhu needhaane
ainkaram enbadhu needhaane
charanam enbadhu needhaane
saasthaa enbadhu needhaane
aishwaryam enbadhu needhaane
aanandha madhavan needhaane
needhaane adhu naan thaane
niththiya vasthu naam thaane
Shankara Siva Shankara
தெற்குத் தென்றல் வீசும்போது தேகம் தொடுவது நீதானே
தெம்மாங்கை நான் கேட்கும்போது தேனாய் இனிப்பது நீதானே
சங்கரா சிவ சங்கரா
புல்லின் நுனியில் பனித்துளி விழுந்தால் தெரியும் வானம் நீதானே
பூக்களின் வாசம் பேசும்போது வீசும் நற்மணம் நீதானே
சங்கரா சிவ சங்கரா
நெஞ்சை அள்ளும் சந்திரன் வருகையில் கொஞ்சும் வெளிச்சம் நீதானே
நீலக்கடலலை மோதும்போது சிதறும் நீர்த்துளி நீதானே
சங்கரா சிவ சங்கரா
காலைக் கதிரவன் சுற்றுவதால் வரும் காலக் கணிதம் நீதானே
கவிதை பாட வார்த்தை எடுத்தால் காணும் அர்த்தம் நீதானே
சங்கரா சிவ சங்கரா
பிள்ளைக் கனவில் என்னுடன் வந்து பேசிய தேவன் நீதானே
பேசா நிலையில் முதுமையின் அமைதியில் பிறக்கும் தெய்வம் நீதானே
சங்கரம் என்பது நீதானே
சாஸ்வதம் என்பது நீதானே
சத்தியம் என்பது நீதானே
தத்துவம் என்பது நீதானே
சதுர்மறை என்பது நீதானே
தரிசனம் என்பது நீதானே
சாத்திரம் என்பது நீதானே
க்ஷேத்திரம் என்பது நீதானே
அபயம் என்பது நீதானே
ஐங்கரம் என்பது நீதானே
சரணம் என்பது நீதானே
சாஸ்தா என்பது நீதானே
ஐஸ்வர்யம் என்பது நீதானே
ஆனந்த மாதவன் நீதானே
நீதானே அது நான்தானே
நித்திய வஸ்து நாம்தானே
சங்கரா சிவ சங்கரா
Komentarze