Theriyavillai Rama
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
தெரியவில்லை ராமா - மனம்
தெளிய ஒரு மார்க்கம்
தேவா திசை காட்டு - கடைத்
தேற அருள் கூட்டு
அறிந்ததில்லை ராமா - உனை
அடையும் வழிப்பாடு
ஆட்கொள்ள வேண்டும்
ஐயா உந்தன் பாடு
மலிவாய் உனைத் தந்தாய்...
மனிதனென்று ஏமாந்தோம்
மாயை சூழ்ந்ததாலே
மயக்கிலே உழன்றோம்
கலியுகத்தில் வந்தாய் - நின்
கருணை அள்ளித் தந்தாய் -என்
கண்களைத் திறந்தாய் - சிவ
சங்கரா நீ என் தாய்
Comments