Thaththi thaththi nadandhu
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Thaththi thaththi nadandhu varum chinna muruga - unai
thaavi vandhu anaiththidavo vanna muruga
bakthi seyyum vazhiyariyaen vel muruga - endha
baavanaiyil unai thozhuvaen maal maruga
malaimele koyil konda baala muruga - yera
malaippaay irukkudhadaa kola muruga
maalai katti vaiththaenadaa chella muruga
manamirangi vandhidadaa valla muruga
maan magalai manandhidavae vandha muruga - nee
mayajalam seidhadhenna endhan muruga
then thinai maa kondu vandhen appa muruga
thaedi vara vaikkaadheda suppaa muruga
appanai vaay poththa vaiththa saami muruga - andha
arpudhaththai innum konjam kaami muruga
theepporiyil udhirndhu vandha dheva muruga - unai
dhinam paniya arul gurunadha muruga
naaval pazham oodhi thinna vaiththa muruga - avvai
gnaana garvam adanga vaiththa chinna muruga
yezhaam padai veedu konda engal muruga - engal
yaekkamellaam theerkkum Sivashankar muruga
தத்தி தத்தி நடந்து வரும் சின்ன முருகா - உனைத்
தாவி வந்து அணைத்திடவோ வண்ண முருகா
பக்தி செய்யும் வழியறியேன் வேல் முருகா - எந்த
பாவனையில் உனைத் தொழுவேன் மால் மருகா
மலைமேலே கோயில் கொண்ட பால முருகா - ஏற
மலைப்பாய் இருக்குதடா கோல முருகா
மாலை கட்டி வைத்தேனடா செல்ல முருகா
மனமிரங்கி வந்திடடா வல்ல முருகா
மான்மகளை மணந்திடவே வந்த முருகா - நீ
மாயா ஜாலம் செய்ததென்ன எந்தன் முருகா
தேன் தினை மா கொண்டு வந்தேன் அப்பா முருகா
தேடி வர வைக்காதேடா சுப்பா முருகா
அப்பனை வாய் பொத்த வைத்த சாமி முருகா - அந்த
அற்புதத்தை இன்னும் கொஞ்சம் காமி முருகா
தீப்பொறியில் உதிர்ந்து வந்த தேவா முருகா - உனைத்
தினம் பணிய அருள் குரு நாதா முருகா
நாவல் பழம் ஊதித்தின்ன வைத்த முருகா - ஔவை
ஞான கர்வம் அடங்க வைத்த சின்ன முருகா
ஏழாம் படை வீடு கொண்ட எங்கள் முருகா - எங்கள்
ஏக்கமெல்லாம் தீர்க்கும் சிவசங்கர் முருகா
Opmerkingen