Thanukku Thanakku Ennum
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
தனக்கு தனக்கு என்னும் கழுகு - இல்லை
எனக்கு எனக்கு என்னும் கறையான்
உனக்கு மீதம் இதில் ஏது - இதை
உணர்ந்து கொள்வாயோ மனிதா
மணக்கும் என்று தைலம் பூசி - பிறர்
மதிக்கப் பட்டாடை உடுத்தி
சுவைத்துக் களித்து விருந்துண்டு
உடலைப் பேணுகின்ற மனிதா - உன்னை
கணக்குள் கூட்டிக் கழித்து - ஒரு
காசும் தர்மம் செய்கில்லாய் - வாழ்வுக்
கணக்கு வைத்தானே யமனும் - இதைக்
கணமும் நினைந்தாயோ மனிதா
சொந்தம் சுற்றமெனச் சொல்லி - உனைச்
சூழ்ந்து சுகமடைந்த பேர்கள்
வந்த யமனிடம் உனக்காய் - தான்
வருவேனென்பாரோ மனிதா
உடன் எடுத்து நீ செல்ல
உன்னிடம் என்ன உண்டு
கடன் பட்ட பிள்ளை பெண்டு
கழன்று கொள்வாரே மனிதா
தலங்கள் சென்று வந்தாயோ
தவத்தில் சிறிதும் ஆழ்ந்தாயோ
நலன்கள் ஏதும் விளைத்தாயோ - இறை
நாமம் ஜபித்து வாழ்ந்தாயோ
சத்தியம் பேசி வாழ்ந்தாயோ - விரத
பத்தியங்கள் இருந்தாயோ - இறையைக்
கத்திக் கதறி அழைத்தாயோ - அவன்
கருணை வேண்டி நின்றாயோ
இறை அருள் ஒன்று தானே - உன்னை
இனிய சொர்க்கத்தில் சேர்க்கும்
பறை கொட்டி சிவசங்கர் சொன்னான் - அவன்
பதம் பற்றி உயர்வாயே
Comments