Thaniyaaga ninren
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 6 min read
Updated: Jul 9, 2020
Audio:
PAARUKKUL UNAIYANRI YAAR INI VENDUM
PARAMAA SIVASHANKAR PERUMAANE SOLVAAY
Thaniyaaga ninren thaanaaga vandhaay
thaniyaadha gnana dhaagathai thandhaay
kaniyaaga endhan kaiyil kidaithaay
kaniyaadha nenjai kaviyaa karaithaay
ullaththin ulle ninraaduginraay
unnulle yeno nagaiyaaduginraay
kallathanathil kai therndha kannaa - un
kangal thirandhu paarththaal dhaan enna
valai onru pinni vagaiyaay izhuththaay
silaiyaaga ninren sindhikka vaiththaay
kalai onru thandhu kaliththida vaiththaay
malaiyaaga undhan arul alli thandhaay
piththaa enren piththida vaiththaay
peyaa enren punsirippu kondaay
mukthaa enren monaththil aazhndhaay
murugaa enren urugiye vandhaay
sivane enren shakthiyai thandhaay
kannaa enren en kannai thirandhaay
thaaye enren thaavi anaithaay
iraivaa enren viraivaaga vandhaay
kuzhandhaay enreen konji siriththaay
kumari enren naani kunindhaay
aththaa enren anbudan kandaay
amma enren azhudha kann thudaiththaay
maamaa enren - kadavul maamaa enren maarbodanaiththaay
malaiyaa enren- yezhumalaiyaa enren manaththul siriththaay
thozhaa enren thunaiyaaga ninraay
thondan nee enren pani seyya vandhaay
aiyappa enren idhu meyyappa enraay
arulappa enren anbinai thandhaay
kaigal pidiththu koottiye senraay
kaaladiyil vaiththu karunai mazhai pozhindhaay
nerukku nere unai kaanuginren - un
nizhalil thaane inrum pasiyaaruginren
paarukkul unaiyanri yaar ini vendum
parama Siva Shankar perumaane solvaay
kannukku kannaay kaaththuvaruginraay
karuththile ninru nee pesuginraay
vinnukkum mannukkum valarndhavane kannaa - en
vinai yaavum theerththu aatkolvaay kannaa
பாருக்குள் உனையன்றி யார் இனி வேண்டும்
பரமா சிவசங்கர் பெருமானே சொல்வாய்
தனியாக நின்றேன் தானாக வந்தாய்
தணியாத ஞானத் தாகத்தை தந்தாய்
கனியாக எந்தன் கையில் கிடைத்தாய்
கனியாத நெஞ்சைக் கவியால் கரைத்தாய்
உள்ளத்தின் உள்ளே நின்றாடுகின்றாய்
உன்னுள்ளே ஏனோ நகையாடுகின்றாய்
கள்ளத்தனத்தில் கைதேர்ந்த கண்ணா - உன்
கண்கள் திறந்து பார்த்தால் தான் என்ன
வலையொன்று பின்னி வகையாய் இழுத்தாய்
சிலையாக நின்றேன் சிந்திக்க வைத்தாய்
கலையொன்று தந்து களித்திட வைத்தாய்
மலையாக உந்தன் அருள் அள்ளித் தந்தாய்
பித்தா என்றேன் பித்திட வைத்தாய
பேயா என்றேன் புன்சிரிப்பு கொண்டாய்
முக்தா என்றேன் மோனத்தில் ஆழ்ந்தாய்
முருகா என்றேன் உருகியே வந்தாய்
சிவனே என்றேன் சக்தியைத் தந்தாய்
கண்ணா என்றேன் என் கண்ணைத் திறந்தாய்
தாயே என்றேன் தாவி அணைத்தாய்
இறைவா என்றேன் விரைவாக வந்தாய்
குழந்தாய் என்றேன் கொஞ்சிச் சிரித்தாய்
குமரி என்றேன் நாணிக் குனிந்தாய்
அத்தா என்றேன் அன்புடன் கண்டாய்
அம்மா என்றேன் அழுதகண் துடைத்தாய்
மாமா என்றேன் - கடவுள் மாமா என்றேன் மார்போடணைத்தாய்
மலையா என்றேன் - ஏழுமலையா என்றேன் மனத்துள் சிரித்தாய்
தோழா என்றேன் துணையாக நின்றாய்
தொண்டன் நீ என்றேன் பணி செய்ய வந்தாய்
ஐயப்பா என்றேன் இது மெய்யப்பா என்றாய்
அருளப்பா என்றேன் அன்பினைத் தந்தாய்
கைகள் பிடித்துக் கூட்டியே சென்றாய்
காலடியில் வைத்து கருணைமழை பொழிந்தாய்
நேருக்கு நேரே உனைக் காணுகின்றேன் - உன்
நிழலில்தானே இன்றும் பசியாறுகின்றேன்
பாருக்குள் உனையன்றி யார் இனி வேண்டும்
பரமா சிவசங்கர் பெருமானே சொல்வாய்
கண்ணுக்குக் கண்ணாய்க் காத்து வருகின்றாய்
கருத்திலே நின்று நீ பேசுகின்றாய்
விண்ணுக்கும் மண்ணுக்கும் வளர்ந்தவனே கண்ணா - என்
வினை யாவும் தீர்த்து ஆட்கொள்வாய் கண்ணா
Meaning பாருக்குள் உனையன்றி யார் இனி வேண்டும் (PAARUKKUL UNAIYANRI YAAR INI VENDUM) Do I need anyone else in this world other than you பரமா சிவசங்கர் பெருமானே சொல்வாய் (PARAMAA SIVASHANKAR PERUMAANE SOLVAAY) Oh Lord, Siva Shankara please tell me தனியாக நின்றேன் தானாக வந்தாய் (Thaniyaaga ninren thaanaaga vandhaay) I was standing alone and you came by yourself தணியாத ஞானத் தாகத்தை தந்தாய் (thaniyaadha gnana dhaagathai thandhaay) You gave never quenching thirst for wisdom கனியாக எந்தன் கையில் கிடைத்தாய் (kaniyaaga endhan kaiyil kidaithaay) I received you as a precious fruit on my hand கனியாத நெஞ்சைக் கவியால் கரைத்தாய் (kaniyaadha nenjai kaviyaa karaithaay) You mellowed my unripe heart with your poems உள்ளத்தின் உள்ளே நின்றாடுகின்றாய் (ullaththin ulle ninraaduginraay) You are dancing inside my heart உன்னுள்ளே ஏனோ நகையாடுகின்றாய் (unnulle yeno nagaiyaaduginraay) You are laughing inside you, not sure of why கள்ளத்தனத்தில் கைதேர்ந்த கண்ணா - உன் (kallathanathil kai therndha kannaa - un) Lord Krishna, you have mastered the art of stealing my heart - you கண்கள் திறந்து பார்த்தால் தான் என்ன (kangal thirandhu paarththaal dhaan enna) Why cannot you open your eyes and look at me Summary 1: I was standing alone and you came to me, you gave never quenching thirst for wisdom, I received you as a precious fruit on my hand, You mellowed my stone heart with your poems , You are dancing inside my heart, You are laughing inside you, not sure of why, Lord Krishna, you have mastered the art of stealing my heart and why cannot you open your eyes and look at me வலையொன்று பின்னி வகையாய் இழுத்தாய் (valai onru pinni vagaiyaay izhuththaay) You weaved a net and pulled me towards you சிலையாக நின்றேன் சிந்திக்க வைத்தாய் (silaiyaaga ninren sindhikka vaiththaay) I stood like a stone and you made me think கலையொன்று தந்து களித்திட வைத்தாய் (kalai onru thandhu kaliththida vaiththaay) You taught me a skill to rejoice in it மலையாக உந்தன் அருள் அள்ளித் தந்தாய் (malaiyaaga undhan arul alli thandhaay) You generously shared your grace in abundance பித்தா என்றேன் பித்திட வைத்தாய (piththaa enren piththida vaiththaay) I called you insane and you made me to love you madly பேயா என்றேன் புன்சிரிப்பு கொண்டாய் (peyaa enren punsirippu kondaay) I called you a ghost but you smiled முக்தா என்றேன் மோனத்தில் ஆழ்ந்தாய் (mukthaa enren monaththil aazhndhaay) I called you the liberated man and you went in silence முருகா என்றேன் உருகியே வந்தாய் (murugaa enren urugiye vandhaay) I called you Lord Muruga and you lovingly came to me Summary 2: You weaved a net and pulled me towards you, I stood like a stone and you made me think, You taught me a skill to rejoice in it , You generously shared your grace in abundance, I called you insane and you made me to love you madly , I called you a ghost but you smiled, I called you the liberated man and you went in silence , I called you Lord Muruga and you lovingly came to me சிவனே என்றேன் சக்தியைத் தந்தாய் (sivane enren shakthiyai thandhaay) I called you Lord Siva and you gave me energy to survive கண்ணா என்றேன் என் கண்ணைத் திறந்தாய் (kannaa enren en kannai thirandhaay) I called you Lord Krishna and you opened my eye (third eye) தாயே என்றேன் தாவி அணைத்தாய் (thaaye enren thaavi anaithaay) You jumped and hugged me when i called you mother goddess இறைவா என்றேன் விரைவாக வந்தாய் (iraivaa enren viraivaaga vandhaay) I called you God and you came running குழந்தாய் என்றேன் கொஞ்சிச் சிரித்தாய் (kuzhandhaay enreen konji siriththaay ) I called you baby and you caressed and laughed குமரி என்றேன் நாணிக் குனிந்தாய் (kumari enren naani kunindhaay) I called you young girl and you were blushing in shy அத்தா என்றேன் அன்புடன் கண்டாய் (aththaa enren anbudan kandaay) I called you my fiance and you looked at me with love அம்மா என்றேன் அழுதகண் துடைத்தாய் (amma enren azhudha kann thudaiththaay) I called you my mom and you wiped my crying eyes Summary 3: I called you Lord Siva and you gave me energy to survive, I called you Lord Krishna and you opened my eye (third eye), You jumped and hugged me when i called you mother goddess, I called you God and you came running , I called you baby and you caressed and laughed, I called you young girl and you were blushing in shy, I called you my fiance and you looked at me with love and I called you my mom and you wiped my crying eyes மாமா என்றேன் - கடவுள் மாமா என்றேன் மார்போடணைத்தாய் (maamaa enren - kadavul maamaa enren maarbodanaiththaay) I called you uncle - I called you God Uncle and you hugged me close to your heart மலையா என்றேன் - ஏழுமலையா என்றேன் மனத்துள் சிரித்தாய் (malaiyaa enren- yezhumalaiyaa enren manaththul siriththaay) I called you hills - I called you the seven hills (Lord Thirumal) and you are laughing inside you for a reason தோழா என்றேன் துணையாக நின்றாய் (thozhaa enren thunaiyaaga ninraay) I called you my friend and you stood as my partner தொண்டன் நீ என்றேன் பணி செய்ய வந்தாய் (thondan nee enren pani seyya vandhaay) I called you volunteer and you came down to do service ஐயப்பா என்றேன் இது மெய்யப்பா என்றாய் (aiyappa enren idhu meyyappa enraay) I called you Lord Ayyappa and you said yes it is true அருளப்பா என்றேன் அன்பினைத் தந்தாய் (arulappa enren anbinai thandhaay) I called you gracious God and you gave me love கைகள் பிடித்துக் கூட்டியே சென்றாய் (kaigal pidiththu koottiye senraay) You walked beside me by holding my hands together காலடியில் வைத்து கருணைமழை பொழிந்தாய் (kaaladiyil vaiththu karunai mazhai pozhindhaay) You kept me at your lotus feet and showered your grace and blessings upon me Summary 4: I called you uncle - I called you God Uncle and you hugged me close to your heart, I called you hills - I called you the seven hills (Lord Thirumal) and you are laughing inside you for a reason, I called you my friend and you stood as my partner , I called you volunteer and you came down to do service, I called you Lord Ayyappa and you said yes it is true, I called you gracious God and you gave me love, You walked beside me by holding my hands together and You kept me at your lotus feet and showered your grace and blessings upon me நேருக்கு நேரே உனைக் காணுகின்றேன் - உன் (nerukku nere unai kaanuginren - un ) I am looking at you face to face - your நிழலில்தானே இன்றும் பசியாறுகின்றேன் (nizhalil thaane inrum pasiyaaruginren) I am seeking refuge in your shadow பாருக்குள் உனையன்றி யார் இனி வேண்டும் (paarukkul unaiyanri yaar ini vendum) Do I need anyone else in this world other than you பரமா சிவசங்கர் பெருமானே சொல்வாய் (parama Siva Shankar perumaane solvaay) Oh Lord, Siva Shankara please tell me கண்ணுக்குக் கண்ணாய்க் காத்து வருகின்றாய் (kannukku kannaay kaaththuvaruginraay) You are protecting me like the eyelashes protecting the eyes கருத்திலே நின்று நீ பேசுகின்றாய் (karuththile ninru nee pesuginraay) You are present in all of my thoughts and conversing with me விண்ணுக்கும் மண்ணுக்கும் வளர்ந்தவனே கண்ணா - என் (vinnukkum mannukkum valarndhavane kannaa - en) Oh Lord Krishna, you revealed your supreme cosmic form by growing from land to sky - my வினை யாவும் தீர்த்து ஆட்கொள்வாய் கண்ணா (vinai yaavum theerththu aatkolvaay kannaa ) Oh Lord Krishna, remove all my misfortunes and take control over me Summary 5: I am looking at you face to face, I am seeking refuge in your shadow, Do I need anyone else in this world other than you, Oh Lord, Siva Shankara please tell me, You are protecting me like the eyelashes protecting the eyes, You are present in all of my thoughts and conversing with me, Oh Lord Krishna, you revealed your supreme cosmic form by growing from land to sky and Oh Lord Krishna, remove all my misfortunes and take control over me
留言