Thanga Surangamadu
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
தங்கச் சுரங்கமடி சிவசங்கர் தங்கச் சுரங்கமடி
தன்னை வருத்தித் தவத்தில் புடமிட்டு
பொன்னாக நம் வாழ்வில் புத்தொளி தந்திடும்
தங்கச் சுரங்கமடி சிவசங்கர் தங்கச் சுரங்கமடி
கங்கை நதியடியோ எங்கள் கருணா சாகரனே
சிந்தைதனில் அன்பு பொங்கிப் பெருகிட
செங்கை உயர்த்தியே ஆசி பொழிந்திடும்
கங்கை நதியடியோ எங்கள் கருணா சாகரனே
இமயமலையடியோ எங்கள் உமையாள் தலைவனடி
அமைதி நிலைத்திட அரணாக வாழ்ந்து
உவமை ஏதும் கூற இல்லா உயர் பண்பில்
இமய மலையடியோ எங்கள் உமையாள் தலைவனடி
வாயுபகவானே கருணை வள்ளல் சங்கரனே
வாங்கிடும் மூச்சில் கலந்து புகுந்து - தான்
தேங்கிய மேனியில் தெய்வீகம் தந்திடும்
வாயுபகவானே கருணை வள்ளல் சங்கரனே
அக்கினி பகவானே சிவசங்கர் அக்கினி பகவானே
அகங்காரம் தன்னை அருளால் எரித்து - நம்
ஆத்தும ஜோதியைச் சுடர்விடச் செய்கின்ற
அக்கினி பகவானே சிவசங்கர் அக்கினி பகவானே
ஆகாயம் சிவசங்கர் எங்கள் ஆதாரம் சிவசங்கர்
ஆதாயம் தேடாத வாழ்வில் மகிழ்ந்து - நம்
ஆசாரம் காப்பதில் அண்டம் அளாவிய
ஆகாயம் சிவசங்கர் எங்கள் ஆதாரம் சிவசங்கர்
பெற்றமண் சங்கரமே நாம் பிறந்தமண் சங்கரமே
உற்றதாய் மேலாய் உலகியல் ஊட்டி - பின்
அற்றிடு ஆசைகள் என்றே உரைக்கின்ற
பெற்றமண் சங்கரமே நாம் பிறந்தமண் சங்கரமே
எங்கள் பேரின்பம் சங்கரமே
Comentarios