top of page

Thanga radham asaindhu

  • SamratchanaLyrics
  • Feb 18, 2019
  • 1 min read

Thanga radham asaindhu asaindhu varudhu Sivashankaran koyililae

thaarani maandhar vandhu niraindhanar dhayaalan vaayililae [parama]


angamellaam anbu pongi thadhumbidum engal paeriraiyaam

aindhu pulangalai kudhiraiyaay pootti thaerinil vandhanarae


sengai thanilae karumbinai vaiththa thiripura sundhariyaal

simma vaahini saattai pidiththu thaerai oattinalae

vanga kadal alai vandhu vandhu en aiyan paadham thazhuvi

vandhu kuvindha paavangal theerndhu sindhai magizhndhadhuvae


putril irukkum naagangalellaam padameduththadi vara

pookkal thanadhu pudhu manam thoova kaatril thavazhndhu vara

naadhasuramum baerigai vaadhyamum nalvaravu koora

nadanamaadiya dhaeva mangaiyar poomazhai pozhindhu vara


ganapathi kandhan paraak paraak ena kattiyam koori vara

kalaimagal alaimagal nilamagalodu gaanam isaiththu vara

naaradhar veenai meetti naadha kadalul aazhndhirukka

nandhi bagavaanum thom thom thomena maththalam isaiththu vara


kadhirum madhiyum vaanil ninru vanangi karam kooppa

kuzhaleduththu Shankaran adhai oodha aavinam pin thodara

pachchai vanna pattuduththi engal bagavaan thaeramara

paalvadiyum andha kannanin maeni kaar niramaay olira


dhaevarum moovarum mundhi mundhi ena thaerai vadam pidikka

thaediya dheivam idho idho ena asareeri olikka

aadhiseshan Shankaran amarum aasanamaayirukka

aanandham aanandhamena mangaiyarellaam aaraththi edukka


தங்க ரதம் அசைந்து அசைந்து வருது சிவசங்கரன் கோயிலிலே

தாரணி மாந்தர் வந்து நிறைந்தனர் தயாளன் வாயிலிலே [பரம]


அங்கமெல்லாம் அன்பு பொங்கி ததும்பிடும் எங்கள் பேரிறையாம்

ஐந்து புலன்களை குதிரையாய் பூட்டி தேரினில் வந்தனரே


செங்கை தனிலே கரும்பினை வைத்த திரிபுர சுந்தரியாள்

சிம்மவாஹினி சாட்டை பிடித்து தேரை ஓட்டினளே

வங்க கடல் அலை வந்து வந்து என் ஐயன் பாதம் தழுவி

வந்து குவிந்த பாவங்கள் தீர்ந்து சிந்தை மகிழ்ந்ததுவே


புற்றில் இருக்கும் நாகங்களெல்லாம் படமெடுத்தாடி வர

பூக்கள் தனது புது மணம் தூவ காற்றில் தவழ்ந்து வர

நாதசுரமும் பேரிகை வாத்யமும் நல்வரவு கூற

நடனமாடிய தேவ மங்கையர் பூமழை பொழிந்து வர


கணபதி கந்தன் பராக் பராக் என கட்டியம் கூறி வர

கலைமகள் அலைமகள் நிலமகளோடு கானம் இசைத்து வர

நாரதர் வீணை மீட்டி நாதக் கடலுள் ஆழ்ந்திருக்க

நந்தி பகவானும் தோம் தோம் தோமென மத்தளம் இசைத்து வர


கதிரும் மதியும் வானில் நின்று வணங்கி கரம்கூப்ப

குழலெடுத்து சங்கரன் அதை ஊத ஆவினம் பின் தொடர

பச்சை வண்ண பட்டுடுத்தி எங்கள் பகவான் தேரமர

பால்வடியும் அந்த கண்ணனின் மேனி கார் நிறமாய் ஒளிர


தேவரும் மூவரும் முந்தி முந்தி என தேரை வடம் பிடிக்க

தேடிய தெய்வம் இதோ இதோ என அசரீரி ஒலிக்க

ஆதிசேஷன் சங்கரன் அமரும் ஆசனமாயிருக்க

ஆனந்தமானந்தமென மங்கையரெல்லாம் ஆரத்தி எடுக்க

 
 
 

Recent Posts

See All
Thaazhiyadhu kaikkola

Thaazhiyadhu kaikkola thaavi uri yaeri navaneedha madhu dhaan thirudi aazhi thanil yaedhum ariyaadhavanai pol urangum aravindhan chella...

 
 
 
Thondu kizhavanivan

Thondu kizhavanivan Shankaran - aanaal thondu seivadhil kumaran maa geethai sonna kannan - ivanukku madiyil thavazhum kuzhandhai gnaanam...

 
 
 
Thulli thulli aadi

Thulli thulli aadi varum pulli mayil velanivan valli dheiva yaanaiyudan vandhu varam tharugubavan thellu thamizh kavidhaiyadhan thaen...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page