Thanakkena Yaedhum
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
தனக்கென ஏதும் வேண்டா சங்கரா - ஓ
தவக்கொழுந்தே என்னுயிரே சங்கரா
மணக்கின்ற கொன்றை அணி சடையிலே
எதற்கென்று கங்கையைச் சுமந்தனை
உனக்கென்று உடலும் சொந்தமில்லையோ - அதில்
உமைக்கென்று சரிபாதி தந்தனை
உயிர்மீதும் உனக்காசை இல்லையோ - கடலில்
ஓங்கிவந்த ஆலகாலம் உண்டனை
வெயில் மழை இடி காற்று தாங்கியே - ஓ
வேதியனே கயிலையிலே தவம் செய்தனை
மானுடனாய் பூமியில் பிறந்தனை
மரணானுபவம் இருமுறை தரிசித்தனை
வையத்தை நல்வழியில் திருத்திட
வந்த வழி சொந்தம் துறந்தனை
ஏன் சங்கரா எதற்கு விரதமிருக்கிறாய்
ஊண் உறக்கமின்றி உடலை வறுக்கிறாய்
நான் பார்த்துக் கொள்வேனென உரைக்கிறாய் - இந்த
நன்றி கெட்ட உலகுக்கோ உழைக்கிறாய்
Comments