Thamarai mugamo
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Thamarai mugamo thalar nadai ezhilo
naan marai oliyo namai naadi vandhadhuvo
vaan mazhai arulo valar pirai azhago
thaenenum mozhiyo kula dheivamum idhuvo
meen vizhiyinilae miralum vandinamo
paal mugaththinilae pavala chevvidhazho
naanmugan ivano narayanan thaano - namai
aala vandhavano nanjunda Shankarano
kalirathan nadaiyo gada gadavenum nagaiyo
karunaiyin punalo thiru arunaiyin kanalo
paleeridum maeniyilae palichchidum venneero
bagavaanai ninaikkaiyilae yaendhaan
perugudhu kanneero
தாமரை முகமோ தளர் நடை எழிலோ
நான் மறை ஒளியோ நமை நாடி வந்ததுவோ
வான் மழை அருளோ வளர் பிறை அழகோ
தேனெனும் மொழியோ குல தெய்வமும் இதுவோ
மீன் விழியினிலே மிரளும் வண்டினமோ
பால் முகத்தினிலே பவளச் செவ்விதழோ
நான்முகன் இவனோ நாராயணன் தானோ - நமை
ஆள வந்தவனோ நஞ்சுண்ட சங்கரனோ
களிரதன் நடையோ கடகடவெனும் நகையோ
கருணையின் புனலோ திரு அருணையின் கனலோ
பளீரிடும் மேனியிலே பளிச்சிடும் வெண்ணீறோ
பகவானை நினைக்கையிலே ஏன்தான் பெருகுது கண்ணீரோ
Comments