Thaayaaga naan maaruvaen
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Thaayaaga naan maaruvaen
thaalaattum naan paaduvaen
kann moodi nee thoongu - Sivashankara
boologam yaavaiyum pooppola kaaththidum
ponnaana naal varum boopaalam paadidum
baba un paarvaiyaal baba un vaarththaiyaal
ulagam ini vizhiththum undhan padham panindhidum
poyyaana vaazhvil thonrum naesa paasa sondhangal
paavangal seyya thoondum kaama krodha ennangal
iththanai asuththamaana jenmam thaevaiyaa
aththanaiyum suththamakki ennai thaetraiyaa
iththanai naeramaa urakkam enmael ilaiya irakkam
anraada vaazhkkaiyil alaindhu thirindhuzhalgaiyil
paeraasai kondu naan pon porulai thaedinaen
kadamai ennum porvai kondu thaevaigalai theerthu kondu
thaevaiyinri dhaegam kondu dhaesaththil vaazhgiraen
sandhosham engu engu enru naanum thaedinaen
sandhaegaminri adhu needhaan enru theliginraen
iththanai asuththamaana jenmam thaevaiyaa
aththanaiyum suththamaakki ennai thaetraiyaa
iththanai naeramaa urakkam enmael illaiyaa irakkam
thuyil ezhundhu nee vaaraayo
thooyonae nee vaaraayo
yaezhai ennai kaaththarulvaay - Sivashankara
தாயாக நான் மாறுவேன்
தாலாட்டும் நான் பாடுவேன்
கண்மூடி நீ தூங்கு - சிவசங்கரா
பூலோகம் யாவையும் பூப்போல காத்திடும்
பொன்னான நாள் வரும் பூபாளம் பாடிடும்
பாபா உன் பார்வையால் பாபா உன் வார்த்தையால்
உலகம் இனி விழித்திடும் உந்தன் பதம் பணிந்திடும்
பொய்யான வாழ்வில் தோன்றும் நேச பாச சொந்தங்கள்
பாவங்கள் செய்ய தூண்டும் காம க்ரோத எண்ணங்கள்
இத்தனை அசுத்தமான ஜென்மம் தேவையா
அத்தனையும் சுத்தமாக்கி என்னை தேற்றையா
இத்தனை நேரமா உறக்கம் என்மேல் இல்லையா இறக்கம்
அன்றாட வாழ்க்கையில் அலைந்து திரிந்துழல்கையில்
பேராசை கொண்டு நான் பொன் பொருளை தேடினேன்
கடமை என்னும் போர்வை கொண்டு தேவைகளை தீர்த்துக் கொண்டு
தேவையின்றி தேகம் கொண்டு தேசத்தில் வாழ்கிறேன்
சந்தோஷம் எங்கு எங்கு என்று நானும் தேடினேன்
சந்தேகமின்றி அது நீதான் என்று தெளிகின்றேன்
இத்தனை அசுத்தமான ஜென்மம் தேவையா
அத்தனையும் சுத்தமாக்கி என்னை தேற்றையா
இத்தனை நேரமா உறக்கம் என்மேல் இல்லையா இறக்கம்
துயில் எழுந்து நீ வாராயோ
தூயோனே நீ வாராயோ
ஏழை என்னை காத்தருள்வாய் - சிவசங்கரா
Commentaires