Undhan kai engal
- SamratchanaLyrics
- Feb 17, 2019
- 1 min read
Undhan kai engal nambikkai
ulagai kaakkum thumbikkai
vidhiyai maatrum vinayakkai
vilai madhippillaa pon kambikkai
igapara sugam tharum iraiyin kai - arul
eetti namakkellam eeyum kai
utravanaay nirkum unmai kai
ookkamenum amudhoottum kai
ellaa dheivamum vaazhum kai
yaezhai uyara uzhaikkum kai
aiyappanivanin arul kai
aiyaminri namai kaakkum kai
oppuyarvillaadha natpu kai
oadi vandhu namai kaakkum kai
audadha malai thookki vandha kai
adhuvae nam Sivashankar anbu kai
உந்தன் கை எங்கள் நம்பிக்கை
உலகைக் காக்கும் தும்பிக்கை
விதியை மாற்றும் வினயக்கை
விலை மதிப்பில்லா பொன் கம்பிக்கை
இகபர சுகம் தரும் இறையின் கை - அருள்
ஈட்டி நமக்கெல்லாம் ஈயும் கை
உற்றவனாய் நிற்கும் உண்மைக்கை
ஊக்கமெனும் அமுது ஊட்டும் கை
எல்லா தெய்வமும் வாழும் கை
ஏழை உயர உழைக்கும் கை
ஐயப்பனிவனின் அருட் கை
ஐயமின்றி நமைக் காக்கும் கை
ஒப்புயர்வில்லாத நட்புக்கை
ஓடிவந்து நம்மை காக்கும் கை
ஔடத மலை தூக்கி வந்த கை
அதுவே நம் சிவசங்கர் அன்புக்கை
Comentarios