Sorgam enakkedharku
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Sorgam enakkedharku - nee endhan
pakkam irukkaiyilae
motchamum ini edharku - undhan
kadaatcham kidaikkaiyilae
varkkamellam adimai konda
vaanavanae Shankara - un
vaazhthugal enakkirukka
en vaazhvu un kaiyirukka
kangalai moodi ninraal - ullae un
kaatchidhaan varugudhappaa
karuththai kuviththu vittaal - un nagaippu
kaadhilae kaekudhappaa
kaalai pidiththu vittaal - ennai thoda
kolgalum anjudhappaa
karunai kadal unnilae - yezhu jenma
paabam karaindhadhappaa
nashtam enakku illai - yedhum
kashtam iniyum vandhaal
naadagam eedhillai - naanaedhum
vaedangal podavillai
sanjalam vandhaalum - ini undhan
sharanangal viduvadhillai
saaththiram sagunangalum - ini endhan
goththiraththil illai
சொர்க்கம் எனக்கெதற்கு - நீ எந்தன்
பக்கம் இருக்கையிலே
மோட்சமும் இனி எதற்கு - உந்தன்
கடாட்சம் கிடைக்கையிலே
வர்க்கமெல்லாம் அடிமை கொண்ட
வானவனே சங்கரா - உன்
வாழ்த்துக்கள் எனக்கிருக்க
என் வாழ்வு உன் கையிருக்க
கண்களை மூடி நின்றால் - உள்ளே உன்
காட்சிதான் வருகுதப்பா
கருத்தைக் குவித்து விட்டால் உன் நகைப்பு
காதிலே கேட்குதப்பா
காலைப்பிடித்து விட்டால் என்னைத் தொட
கோள்களும் அஞ்சுதப்பா
கருணைக்கடல் உன்னிலே ஏழு ஜென்ம
பாபம் கரைந்ததப்பா
நஷ்டம் எனக்கு இல்லை ஏதும்
கஷ்டம் இனியும் வந்தால்
நாடகம் ஈதில்லை நானேதும்
வேடங்கள் போடவில்லை
சஞ்சலம் வந்தாலும் இனி உந்தன்
சரணங்கள் விடுவதில்லை
சாத்திரம் சகுனங்களும் இனி எந்தன்
கோத்திரத்தில் இல்லை
Comments