Sondham enraal
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Sondham enraal Sivashankaramthaan
sorgamenraalae samratchanathaan
endha oor yaaro nee yaedhu madham
enru kaetkaadha paeranbaalaethaan
sindhaiyil gnaanam vidhaippavanthaan
seerthiruththi kalai eduppavanthaan
nalla kandu mudhal seibavanthaan - naam
naalum uyara uzhaippavanthaan
maayaiyilum nammai thalliduvaan
mana urudhi kandaal alliduvaan
theedhugal yaavum odhukkiduvaan
dheiva chilaiyaay sedhukkiduvaan
annaiyaay anbai pozhindhiduvaan
thandhaiyin kandippum seidhiduvaan
guruvaay mei gnaanam aliththiduvaan
kula dheivamaagiyae kaaththiduvaan
bandham namakkullae undu enbaan
baakki saakki thara azhaiththaen enbaan
sharanam enraal manam irangiduvaan
samratchanam seyya mundhiduvaan
annadhaadhaa enraal ivanaethaan
atchaya paaththira latchananthaan
enna vaendumenru kaetpavanthaan
yaedhai kaettaalum tharubavanthaan
paanjanya oli ezhuppiduvaan
bakthar koottaththai azhaiththiduvaan
vaanjaiyodu saerththu anaiththiduvaan
vandhu vittaay padham thandhaen enbaan
vandha vinaigal ozhippavanthaan
varu vidhippayanum thaduppavanthaan
nandha kumaaran hari ivanthaan
nadamidum sivan enbaan ivanaethaan
சொந்தம் என்றால் சிவசங்கரம் தான்
சொர்க்கமென்றாலே சம்ரட்சணா தான்
எந்த ஊர் யாரோ நீ ஏது மதம்
என்று கேட்காத பேரன்பாலே தான்
சிந்தையில் ஞானம் விதைப்பவன் தான்
சீர்திருத்திக் களை யெடுப்பவன் தான்
நல்ல கண்டு முதல் செய்பவன் தான் - நாம்
நாளும் உயர உழைப்பவன் தான்
மாயையிலும் நம்மைத் தள்ளிடுவான்
மன உறுதி கண்டால் அள்ளிடுவான்
தீதுகள் யாவும் ஒதுக்கிடுவான்
தெய்வச் சிலையாய்ச் செதுக்கிடுவான்
அன்னையாய் அன்பைப் பொழிந்திடுவான்
தந்தையின் கண்டிப்பும் செய்திடுவான்
குருவாய் மெய்ஞானம் அளித்திடுவான்
குலதெய்வமாகியே காத்திடுவான்
பந்தம் நமக்குள்ளே உண்டு என்பான்
பாக்கி சாக்கி தர அழைத்தேன் என்பான்
சரணம் என்றால் மனம் இரங்கிடுவான்
சம்ரட்சணம் செய்ய முந்திடுவான்
அன்னதாதா என்றால் இவனேதான்
அட்சய பாத்திர லட்சணன் தான்
என்ன வேண்டுமென்று கேட்பவன் தான்
ஏதைக் கேட்டாலும் தருபவன் தான்
பாஞ்சஜன்ய ஒலி எழுப்பிடுவான்
பக்தர் கூட்டத்தை அழைத்திடுவான்
வாஞ்சையொடு சேர்த்து அணைத்திடுவான்
வந்து விட்டாய் பதம் தந்தேன் என்பான்
வந்த வினைகள் ஒழிப்பவன் தான்
வரு விதிப்பயனும் தடுப்பவன் தான்
நந்த குமாரன் ஹரி இவன் தான்
நடமிடும் சிவன் என்பான் இவனே தான்
Commentaires