Solla Solla
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
சொல்ல சொல்ல இனிக்குதடா உன் நாமம் - சங்கரா
ஜோதி மயமானதடா நின் ரூபம் - சங்கரா
மெல்ல மெல்ல மனம் வருடும் சுநாதம் - உன்
மேன்மைகளைப் புகழ்ந்திருக்கும் சங்கர கீதம்
அள்ள அள்ளக் குறையாத பெருநிதியம்
ஆறுதலைத் தருகுதடா உன் நேயம்
கள்ளமென்பதில்லாத பிள்ளை மனம்
கனவிலும் நமை நினைந்திருக்கும் தாயுள்ளம் - உன்னை
வல்லவனாய் உலகாளும் பேராண்மை
வாக்கியங்கள் யாவையுமே புது வேதம்
நல்லவர்க்கும் அல்லவர்க்கும் நீ நண்பன்
நம்பி வரும் பேர்களுக்குக் குலதெய்வம் - சங்கரா
Comments