Sivashankarar nammai vittu
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Sivashankarar nammai vittu engae senriduvaar
meyyanbarai kaaththidavae kaaththu nirkinraar
sei vinaigal oadum avar paeraichonnaalae
aiyamillai avararul nammaiyae kaakkum
kaadu malai yaeri naalum nondhida vaendaam
paadum paattil avar naamam potri panivom
sharanam ena avar paadham patri kondaalae
kallamillaa nanmai seivaar Sivashankarar
abayam ena vandhavarkkum arulum seidhiduvaar
alavillaadha aishwaryamum aliththiduvaar
சிவசங்கரர் நம்மை விட்டு எங்கே சென்றிடுவார்
மெய்யன்பரை காத்திடவே காத்து நிற்கின்றார்
செய்வினைகள் ஓடும் அவர் பேரை சொன்னாலே
ஐயமில்லை அவரருள் நம்மையே காக்கும்
காடு மலை ஏறி நாளும் நொந்திட வேண்டாம்
பாடும் பாட்டில் அவர் நாமம் போற்றி பணிவோம்
சரணம் என அவர் பாதம் பற்றிக் கொண்டாலே
கள்ளமில்லா நன்மை செய்வார் சிவசங்கரர்
அபயம் என வந்தவர்க்கும் அருளும் செய்திடுவார்
அளவில்லாத ஐஸ்வர்யமும் அளித்திடுவார்
Comments