Sivashankaram enum
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Sivashankaram enum thirumandhiram thanai
sindhiththiru maname - Sri
suba mangalakaram sugirdha varapradham
dhayai migu saagaram tharuna ratchaakaram
dhanamodu kalviyum thandhidum mandhiram
thalaraa manaththinai tharum arul yandhiram
bavabayaharana bavviya mandhiram
bakthargal nenjilae padhindha mahaa mandhiram
unnum kaalamum urangum saamamum
uzhaikkum pozhudhilum oayvu kol naeramum
allum pagalum anavaradhamum aiyan
aayiram naamangalil azhagiya naamamenum
சிவசங்கரம் எனும் திருமந்திரம் தனை
சிந்தித்திரு மனமே - ஸ்ரீ
சுபமங்களகரம் சுகிர்த வரப்ரதம்
தயைமிகு சாகரம் தருண ரட்சாகரம்
தனமொடு கல்வியும் தந்திடும் மந்திரம்
தளரா மனத்தினை தரும் அருள் யந்திரம்
பவபயஹரண பவ்விய மந்திரம்
பக்தர்கள் நெஞ்சிலே பதிந்த மஹா மந்திரம்
உண்ணும் காலமும் உறங்கும் சாமமும்
உழைக்கும் பொழுதிலும் ஓய்வு கொள் நேரமும்
அல்லும் பகலும் அனவரதமும் ஐயன்
ஆயிரம் நாமங்களில் அழகிய நாமமெனும்
Komentarze