top of page

Sivashankaram ennum sollae

  • SamratchanaLyrics
  • Feb 18, 2019
  • 1 min read

Sivashankaram ennum sollae amirdham

sindhiththirukka adhan suvaiyae amirdham

thavamagan amarndha thalamae amirdham

tharunamarindha avan varugai amirdham


abayam aliththidum avan karam amirdham

anjana marundhidum aarudhal amirdham

karunai pongkum kangal amirdham

kadavul mama sollum kadhaigalum amirdham


navarasam thadhumbidum baavangal amirdham

naattiya muththirai kaattudhal amirdham

gavanam vaiththidum karuththugal amirdham

kaattidum irakkamum kanivum amirdham


pagaiyedhum kollaa panbae amirdham

paasam viraviya sparisam amirdham

nagai mugam kollum rupam amirdham

nalangal aliththidum ullam amirdham


iraivan amarndha idhayam amirdham

eesan avan pugazh iyambudhal amirdham

thalaivan paesum vasanam amirdham

thaazhaakkaigalin thagaimai amirdham


kalaigalai valarkkum rasanai amirdham

kaaviyamaagiya pugazhum amirdham

atchaya paaththira latchanam amirdham

latchiya maa magan ratchanam amirdham


kadavulin naama sravanam amirdham

kadunthava nenjul smaranam amirdham

nadamidum naayagan thadamum amirdham

naadhanai paadidum geethamum amirdham


bagavaan udhiththa jagamae amirdham

baavangal pongidum baavanai amirdham

punnagai viriyum poomugam amirdham

puththoli thandhidum aasigal amirdham


padham thandhaalum paadhangal amirdham

parivodu theendidum paravasam amirdham

srushtigal seidhidum siththukkal amirdham

seelaraay aakkidum sivamae amirdham


dhasa avadhaara dhaasaradhi amirdham

thanjam aliththidum thaay manam amirdham

dhisaiyengum oliththidum thiruppugazh amirdham

dheenadhayaalanin thiruvadi amirdham


சிவசங்கரம் என்னும் சொல்லே அமிர்தம்

சிந்தித்திருக்க அதன் சுவையே அமிர்தம்

தவமகன் அமர்ந்த தலமே அமிர்தம்

தருணமறிந்த அவன் வருகை அமிர்தம்


அபயமளித்திடும் அவன் கரம் அமிர்தம்

அஞ்சன மருந்திடும் ஆறுதல் அமிர்தம்

கருணை பொங்கும் கண்கள் அமிர்தம்

கடவுள் மாமா சொல்லும் கதைகளும் அமிர்தம்


நவரசம் ததும்பிடும் பாவங்கள் அமிர்தம்

நாட்டிய முத்திரை காட்டுதல் அமிர்தம்

கவனம் வைத்திடும் கருத்துகள் அமிர்தம்

காட்டிடும் இரக்கமும் கனிவும் அமிர்தம்


பகையெதும் கொள்ளாப் பண்பே அமிர்தம்

பாசம் விரவிய ஸ்பரிசம் அமிர்தம்

நகை முகம் கொள்ளும் ரூபம் அமிர்தம்

நலன்கள் அளித்திடும் உள்ளம் அமிர்தம்


இறைவன் அமர்ந்த இதயம் அமிர்தம்

ஈசன் அவன் புகழ் இயம்புதல் அமிர்தம்

தலைவன் பேசும் வசனம் அமிர்தம்

தாழாக்கைகளின் தகைமை அமிர்தம்


கலைகளை வளர்க்கும் ரசனை அமிர்தம்

காவியமாகிய புகழும் அமிர்தம்

அட்சய பாத்திர லட்சணம் அமிர்தம்

லட்சிய மாமகன் ரட்சணம் அமிர்தம்


கடவுளின் நாம ஸ்ரவணம் அமிர்தம்

கடுந்தவ நெஞ்சுள் ஸ்மரணம் அமிர்தம்

நடமிடும் நாயகன் தடமும் அமிர்தம்

நாதனைப் பாடிடும் கீதமும் அமிர்தம்


பகவான் உதித்த ஜகமே அமிர்தம்

பாவங்கள் பொங்கிடும் பாவனை அமிர்தம்

புன்னகை விரியும் பூமுகம் அமிர்தம்

புத்தொளி தந்திடும் ஆசிகள் அமிர்தம்


பதம் தந்தாளும் பாதங்கள் அமிர்தம்

பரிவொடு தீண்டிடும் பரவசம் அமிர்தம்

ஸ்ருஷ்டிகள் செய்திடும் சித்துக்கள் அமிர்தம்

சீலராய் ஆக்கிடும் சிவமே அமிர்தம்


தச அவதார தாசரதி அமிர்தம்

தஞ்சமளித்திடும் தாய் மனம் அமிர்தம்

திசையெங்கும் ஒலித்திடும் திருப்புகழமிர்தம்

தீனதயாளனின் திருவடி அமிர்தம்





 
 
 

Recent Posts

See All
Sanga thamizh naadu

Sanga thamizh naadu sei thavamo - Siva Shankaran thonriya vaibavamo thanga churangame ingutradho - inge dhaarmeega sindhai nilai petradho...

 
 
 
Sankatahara mangaladhara

Sankatahara mangaladhara pankaja charana shankarasudha kunjaramuka aanandha natana aadhi purusha jothi vadiva gnaana pooranaa amboruha...

 
 
 
Shankara nin sirippu

Shankara nin sirippu aanandha alai sirippu sathguruvae nin sirippu gnaanaththin sudar sirippu anbu manam arul surakkum nin sirippu -...

 
 
 

Comentarios


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page