top of page

Siva siva siva Shankara

  • SamratchanaLyrics
  • Feb 18, 2019
  • 2 min read

Siva siva siva Shankara - en

jeevane Sivashankara

hara hara Sivashankara - en

aandavaa Sivashankara


vaana veedhiyil unnaiyae dhinam

thaedi nirkiraen Shankara

vatta nilavilae mugaththai kaatti nee

etta nirpadhaen Shankara

mona nilaiyilae en manaththinai

moozhga vaiththavaa Shankara

mukthi thandhida kai pidiththenai

kootti chellavaa Shankara


aadum un padha abinayaththilae

adimai aaginaen Shankara - en

thaedum kangalil dheivamaagavae

kaatchi thandhidum Shankara

utra sondhamaay ulagengumae

oruvarillaiyae Shankara - unai

petra thaayena naanum ennudhal

paedhamai aamo Shankara


velli panimalai kulirilae udal

viraiththu pogumae Shankara

vizhiyil analthanai vaiththavaa - adhai

verutti oattidu Shankara

azhalin uruvam nee annamalaiyena

arindha pinnumae Shankara

abalai manamunai enni urugiyae

ayarndhu pogudhae Shankara


kayilai malaiyilae nadakkaiyil undhan

kaalgal nogumae Shankara

kanneer pookkalai nee nadandhidum

paadhai thoovuvaen Shankara

kaayum veyililae kannae un mugam

kanri pogumae Shankara

thaayen aasigal thodarndhu nizhalena

kudai pidikkumae Shankara


nalla unavinri chella magan udal

nalindhu pogumae Shankara

vallal nee seidha dharumam yaavum un

thalai kaakkume Shankara

ulla koyilil uraindhiruppavaa

yaen sirikkiraay Shankara

ulagam yaavumae padiyalappavan

naanenraayo Siva Shankara


paayum puligalum paambum unnilae

paasam kollume Shankara

paravai inangalum gala gala ena

kulavi magizhume Shankara

thoyum anbinaal uyirinangalil

uraiyum aathmane Shankara

thotri unnudan naanum vandhida

arul seiguvaay Shankara


thaay manam unai enni enniye

thaviththalaagumo Shankara

koovi unnai naan azhaithathum udan

kudhiththu oadi vaa Shankara

unnai pirindhu naan vaazhavo endhan

uyirum nilaikkumo Shankara

oadi vandhu en madiyil saayndhu nee

urakkam kol Siva Shankara


சிவ சிவ சிவ சங்கரா - என்

ஜீவனே சிவ சங்கரா

ஹர ஹர சிவ சங்கரா - என்

ஆண்டவா சிவ சங்கரா


வானவீதியில் உன்னையே தினம்

தேடி நிற்கிறேன் சங்கரா

வட்ட நிலவிலே முகத்தைக் காட்டி நீ

எட்ட நிற்பதேன் சங்கரா

மோன நிலையிலே என் மனத்தினை

மூழ்க வைத்தவா சங்கரா

முக்தி தந்திடக் கைபிடித்தெனைக்

கூட்டிச் செல்லவா சங்கரா


ஆடும் உன் பத அபிநயத்திலே

அடிமை ஆகினேன் சங்கரா - என்

தேடும் கண்களில் தெய்வமாகவே

காட்சி தந்திடும் சங்கரா

உற்ற சொந்தமாய் உலகெங்குமே

ஒருவரில்லையே சங்கரா - உனை

பெற்ற தாயென நானும் எண்ணுதல்

பேதமை ஆமோ சங்கரா


வெள்ளிப் பனிமலைக் குளிரிலே உடல்

விறைத்துப் போகுமே சங்கரா

விழியில் அனல்தனை வைத்தவா அதை

வெருட்டி ஓட்டிடு சங்கரா

அழலின் உருவம் நீ அண்ணாமலையென

அறிந்த பின்னுமே சங்கரா

அபலை மனமுனை எண்ணி உருகியே

அயர்ந்து போகுதே சங்கரா


கயிலை மலையிலே நடக்கையில் உந்தன்

கால்கள் நோகுமே சங்கரா

கண்ணீர்ப் பூக்களை நீ நடந்திடும்

பாதை தூவுவேன் சங்கரா

காயும் வெயிலிலே கண்ணே உன் முகம்

கன்றிப் போகுமே சங்கரா

தாயென் ஆசிகள் தொடர்ந்து நிழலெனக்

குடை பிடிக்குமே சங்கரா


நல்ல உணவின்றி செல்ல மகனுடல்

நலிந்து போகுமே சங்கரா

வள்ளல் நீ செய்த தருமம் யாவும் உன்

தலை காக்குமே சங்கரா

உள்ளக் கோயிலில் உறைந்திருப்பவா

ஏன் சிரிக்கிறாய் சங்கரா

உலகம் யாவுமே படியளப்பவன்

நானென்றாயோ சிவ சங்கரா


பாயும் புலிகளும் பாம்பும் உன்னிலே

பாசம் கொள்ளுமே சங்கரா

பறவை இனங்களும் கல கல என

குலவி மகிழுமே சங்கரா

தோயும் அன்பினால் உயிரினங்களில்

உறையும் ஆத்மனே சங்கரா

தொற்றி உன்னுடன் நானும் வந்திட

அருள் செய்குவாய் சங்கரா


தாய் மனம் உனை எண்ணி எண்ணியே

தவித்தலாகுமோ சங்கரா

கூவி உன்னை நான் அழைத்ததும் உடன்

குதித்து ஓடி வா சங்கரா

உன்னைப் பிரிந்து நான் வாழவோ எந்தன்

உயிரும் நிலைக்குமோ சங்கரா

ஓடி வந்து என் மடியில் சாய்ந்து நீ

உறக்கம் கொள் சிவ சங்கரா


 
 
 

Recent Posts

See All
Sanga thamizh naadu

Sanga thamizh naadu sei thavamo - Siva Shankaran thonriya vaibavamo thanga churangame ingutradho - inge dhaarmeega sindhai nilai petradho...

 
 
 
Sankatahara mangaladhara

Sankatahara mangaladhara pankaja charana shankarasudha kunjaramuka aanandha natana aadhi purusha jothi vadiva gnaana pooranaa amboruha...

 
 
 
Shankara nin sirippu

Shankara nin sirippu aanandha alai sirippu sathguruvae nin sirippu gnaanaththin sudar sirippu anbu manam arul surakkum nin sirippu -...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page