Siva shankaranin pugazh
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 2 min read
Siva shankaranin pugazh paaduvom - ivan
tharani vandha vedha swaroopam
angamellaam urugi paaduvom - ivan
aananthaththin naadha swaroopam
arjunarkku baaradhaththil geethai sonnavan
paeraasaigalai vaerarukka avadhariththavan
garjanaigal seyyum podhu singamaanavan - nam
kaigal thottu thazhuvum podhu thangamaanavan
nambi vandha anaivaraiyum kaadhalippavan - thannai
nambidaadha nabargalukkum vaazhththu solbavan
kumbiduvor nenjamellaam kudiyiruppavan - endha
kombanukkum komban ingu kooththadippavan
indhu muslim baedhamatra anbu rajjiyam - ivan
yaerpaduththa virumbuginra gnaana rajjiyam
endha jaathi endha naadu kaelvigal illai - un
idhayam mattum ingu kodu tholvigal illai
sondha bandham kudumbam vittu veliyil vandhavan - ulagai
sondha bandhamaaki konda jothiyaanavan
andham aadhi yaedhumatra inba saagaram - ivandhaan
aanma ulagin adhi uyarndha raaja gopuram
anbu poondu ulaganaiththum aattuvippavan - ivan
adhattuginra vaarththaikkullum anbu vaippavan
inba thunba kaatchigalai maatra vallavan - idhanaal
iraivanenru potri paadum thagudhi petravan
aadal paadal vallavare oadi vaarungal - ivan
abinayangal kaattuginra azhagai paarungal
paambanai mael thuyilvadhellam yoga niththirai - ingu
paraman kaattum abinayangal gnaana muththirai
viviliyaththin porul vilakkam ingu kaetkalaam - thiru
vaenkadaththin suprabaadham ingu paadalaam
sabari naadhan gosham kooda ingu podalaam - endha
sannidhikkum uriyavanai ingu kaanalaam
kaanal neeril meen pidikka valai virikkirom - verum
kaadharundha oosi vaanga kappal virkirom
eesanenrum yaesuvenrum ivanai nambuvom - naam
ivanidaththil nammai vitru ivanai vaanguvom
சிவசங்கரனின் புகழ் பாடுவோம் - இவன்
தரணி வந்த வேத சொரூபம்
அங்கமெல்லாம் உருகிப் பாடுவோம் - இவன்
ஆனந்தத்தின் நாத சொரூபம்
அர்ஜுனர்க்கு பாரதத்தில் கீதை சொன்னவன்
பேராசைகளை வேரறுக்க அவதரித்தவன்
கர்ஜனைகள் செய்யும் போது சிங்கமானவன் - நம்
கைகள் தொட்டு தழுவும் போது தங்கமானவன்
நம்பி வந்த அனைவரையும் காதலிப்பவன் - தன்னை
நம்பிடாத நபர்களுக்கும் வாழ்த்து சொல்பவன்
கும்பிடுவோர் நெஞ்சமெல்லாம் குடியிருப்பவன் - எந்த
கொம்பனுக்கும் கொம்பன் இங்கு கூத்தடிப்பவன்
இந்து முஸ்லீம் பேதமற்ற அன்பு ராஜ்ஜியம் - இவன்
ஏற்படுத்த விரும்புகின்ற ஞான ராஜ்ஜியம்
எந்த ஜாதி எந்த நாடு கேள்விகள் இல்லை - உன்
இதயம் மட்டும் இங்கு கொடு தோல்விகள் இல்லை
சொந்த பந்தம் குடும்பம் விட்டு வெளியில் வந்தவன் - உலகை
சொந்த பந்தமாக்கிக் கொண்ட ஜோதியானவன்
அந்தம் ஆதி ஏதுமற்ற இன்ப சாகரம் - இவன்தான்
ஆன்ம உலகின் அதி உயர்ந்த ராஜ கோபுரம்
அன்பு பூண்டு உலகனைத்தும் ஆட்டுவிப்பவன் - இவன்
அதட்டுகின்ற வார்த்தைக்குள்ளும் அன்பு வைப்பவன்
இன்ப துன்ப காட்சிகளை மாற்ற வல்லவன் - இதனால்
இறைவனென்று போற்றி பாடும் தகுதி பெற்றவன்
ஆடல் பாடல் வல்லவரே ஓடி வாருங்கள் - இவன்
அபிநயங்கள் காட்டுகின்ற அழகை பாருங்கள்
பாம்பணை மேல் துயில்வதெல்லாம் யோக நித்திரை - இங்கு
பரமன் காட்டும் அபிநயங்கள் ஞான முத்திரை
விவிலியத்தின் பொருள் விளக்கம் இங்கு கேட்கலாம் - திரு
வேங்கடத்தின் சுப்ரபாதம் இங்கு பாடலாம்
சபரிநாதன் கோஷம் கூட இங்கு போடலாம் - எந்த
சந்நிதிக்கும் உரியவனை இங்கு காணலாம்
கானல் நீரில் மீன்பிடிக்க வலை விரிக்கிறோம் - வெறும்
காதறுந்த ஊசி வாங்க கப்பல் விற்கிறோம்
ஈசனென்றும் யேசுவென்றும் இவனை நம்புவோம் - நாம்
இவனிடத்தில் நம்மை விற்று இவனை வாங்குவோம்
Comentarios