Sirpi Sedhukkaadha
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
சிற்பி செதுக்காத பொற்சிலையோ
சித்தர் வரிசையில் முன்னிலையோ
அற்புதம் நிகழ்த்தும் பொற்கரமோ
ஆனந்தம் மலர்ந்த சாகரமோ
பொற்குவை நிறைந்த பொக்கிஷமோ
பூர்ணமாய் வந்த நாராயணமோ
நல்லதே அருளிடும் நாயகமோ
நாட்டிலே உயர்ந்த பாரதமோ
சுத்த சத்துவ தத்துவமோ
சூட்சும தரிசன் சிற்பரமோ
நித்திய நர்த்தன சுந்தரமோ
நிர்மல அன்புதான் சங்கரமோ
Comments