Sirpara thathpara
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Sirpara thathpara paraathparaa
sidhdhayogi Sivashankara
arpudha nadamidum eeshwara
adhisaya roopa Sivashankara
vipanarellaam viyandhiduvaar
vaedha vizhupporul enriduvaar
parpala gnaaniyar vandhiduvaar
paadhaththilae thalai panindhiduvaar
karpagamena nee irukkinraay
kaamadhaenu pol tharuginraay
porpadham thannai pididththu vittaal
bogamum yogamum pozhiginraay
karpavai katravai sitrarivae
kadavulai kaanbadhu paerarivae
nirpavai ulagil onrilaiyae
nirandharamaanadhu ninnarulae
சிற்பர தத்பர பராத்பரா
சித்தயோகி சிவசங்கரா
அற்புத நடமிடும் ஈஸ்வரா
அதிசய ரூபா சிவசங்கரா
விற்பனரெல்லாம் வியந்திடுவார்
வேத விழுப்பொருள் என்றிடுவார்
பற்பல ஞானியர் வந்திடுவார்
பாதத்திலே தலை பணிந்திடுவார்
கற்பகமென நீ இருக்கின்றாய்
காமதேனு போல் தருகின்றாய்
பொற்பதம் தன்னை பிடித்து விட்டால்
போகமும் யோகமும் பொழிகின்றாய்
கற்பவை கற்றவை சிற்றறிவே
கடவுளைக் காண்பது பேரறிவே
நிற்பவை உலகில் ஒன்றிலையே
நிரந்தரமானது நின்னருளே
Comments