top of page

Sirippu ennadi sirippu

  • SamratchanaLyrics
  • Feb 18, 2019
  • 1 min read

Sirippu ennadi sirippu - idhu

Sivashankara sirippu

sindhaiyilae kudi konda

singaara sirippu

pookkalin pudhu virippu venn

paakkalin thani thoguppu

thookkaththilum thodarndhu varum

thooya jeeva sirippu


aakkamudan ookkam thandhu

aandidum avan sirippu

aakkal kaaththal azhiththalaaga

amaindhidum pun sirippu

yaekkangal theerththu vaikkum

irai avanin sirippu

thaekka nilai vaazhvil neekkum

dhivyamaana sirippu


aathmaavai thottizhukkum

aandavanin sirippu

paramaathma aana andha

parandhaaman sirippu

dhukkaththai pokki vidum

dhurai avanin sirippu

pakkaththil vandhu nammai

paaliththidum sirippu


azhugaithanai nagaiyaaga

aakkividum sirippu

thozhugaithanai yaetru enrum

thunai nirkum sirippu

aanandha sirippu malai

thaenantha sirippu

vaerendha sirippumillai

vaedikkai sirippu


sogaththai oatti vidum

sugamaana sirippu - siva

yoga nilai aliththu vidum

yukthiyaana sirippu

attakaasa sirippu adhu

aasai varum sirippu

pattamaram thulirkkum nalla

paasamigum sirippu


vitta kurai thotta kurai

vilakkuginra sirippu

ettezhuththu naamam konda

yezhumalaiyin siripppu

karunai migum sirippu namai

kavarndhizhukkum sirippu

arunagirikku aruliya andha

aarumugan sirippu


sindhanaiyai thoondividum

siththanavan sirippu

vandha pagai viratti vidum

vaalarivan sirippu

vinai payanai vaerarukkum

vishamamaana sirippu

thanai unara thaan vazhangum

thalaivanavan sirippu


சிரிப்பு என்னடி சிரிப்பு இது சிவசங்கர சிரிப்பு

சிந்தையிலே குடி கொண்ட சிங்கார சிரிப்பு

பூக்களின் புது விரிப்பு வெண்பாக்களின் தனி தொகுப்பு

தூக்கத்திலும் தொடர்ந்து வரும் தூய ஜீவ சிரிப்பு


ஆக்கமுடன் ஊக்கம் தந்து ஆண்டிடும் அவன் சிரிப்பு

ஆக்கல் காத்தல் அழித்தலாக அமைந்திடும் புன்சிரிப்பு

ஏக்கங்கள் தீர்த்து வைக்கும் இறையவனின் சிரிப்பு

தேக்க நிலை வாழ்வில் நீக்கும் திவ்யமான சிரிப்பு


ஆத்மாவை தொட்டிழுக்கும் ஆண்டவனின் சிரிப்பு

பரமாத்மா ஆன அந்த பரந்தாமன் சிரிப்பு

துக்கத்தை போக்கி விடும் துரையவனின் சிரிப்பு

பக்கத்தில் வந்து நம்மை பாலித்திடும் சிரிப்பு


அழுகைதனை நகையாக ஆக்கிவிடும் சிரிப்பு

தொழுகைதனை ஏற்று என்றும் துணை நிற்கும் சிரிப்பு

ஆனந்த சிரிப்பு மலைத்தேனந்த சிரிப்பு

வேறெந்த சிரிப்புமில்லை வேடிக்கை சிரிப்பு


சோகத்தை ஓட்டிவிடும் சுகமான சிரிப்பு - சிவ

யோக நிலை அளித்து விடும் யுக்தியான சிரிப்பு

அட்டகாச சிரிப்பு அது ஆசை வரும் சிரிப்பு

பட்டமரம் துளிர்க்கும் நல்ல பாசமிகும் சிரிப்பு


விட்டகுறை தொட்டகுறை விளக்குகின்ற சிரிப்பு

எட்டெழுத்து நாமம் கொண்ட ஏழுமலையின் சிரிப்பு

கருணை மிகும் சிரிப்பு நமைக் கவர்ந்திழுக்கும் சிரிப்பு

அருணகிரிக்கு அருளிய அந்த ஆறுமுகன் சிரிப்பு


சிந்தனையைத் தூண்டிவிடும் சித்தனவன் சிரிப்பு

வந்த பகை விரட்டி விடும் வாலறிவன் சிரிப்பு

வினைப்பயனை வேரறுக்கும் விஷமமான சிரிப்பு

தனை உணரத் தான் வழங்கும் தலைவனவன் சிரிப்பு

 
 
 

Recent Posts

See All
Sanga thamizh naadu

Sanga thamizh naadu sei thavamo - Siva Shankaran thonriya vaibavamo thanga churangame ingutradho - inge dhaarmeega sindhai nilai petradho...

 
 
 
Sankatahara mangaladhara

Sankatahara mangaladhara pankaja charana shankarasudha kunjaramuka aanandha natana aadhi purusha jothi vadiva gnaana pooranaa amboruha...

 
 
 
Shankara nin sirippu

Shankara nin sirippu aanandha alai sirippu sathguruvae nin sirippu gnaanaththin sudar sirippu anbu manam arul surakkum nin sirippu -...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page