top of page

Sindhikka sindhikka

  • SamratchanaLyrics
  • Feb 18, 2019
  • 1 min read

Sindhikka sindhikka thithikkudhe

Sivashankaram ennum then oorudhe

vandhikka ulagam mundhidudhe

vaazhtholi engum muzhangidudhe


sengkadhir oli paravidudhe

sengkamala mugam malarndhidudhe

simmamaay kural oliththidudhe

sindhai adangi odungidudhe


vaanam poo mazhai thoovidudhe

vasandhathin kulir engum paravidudhe

mona nilai ingu soozhgiradhe - thondar

muththukkal kotti kidakkindradhe


venkata malai ingu kaangiradhe

vetri karam ennai azhaikiradhe

sangam uyarndhu olikkiradhe

sanmaarkka kodi parakkinradhe


aagaaya gangai pozhiginradhe

aanandha alai pongi ezhuginradhe

arvindha nethram azhaikkinradhe

amirdham karangalil surakkinradhe


charanam ena manam koovidudhe

shanthi nilai engum soozhgiradhe

gaanangal nenjul inikkinradhe

kangalai neerthirai maraikkinradhe


kolgal anji nadungidudhe

kotravan aanaikkadangidudhe

thaalgal thanjam thara azhaikkinradhe

tharaniyil anbu thazhaikkinradhe


sorkkaththin kadhavugal thirakkinradhe

soozhndha vinaigal parakkinradhe

porkaram ennai anaikkinrandhe - idhu

boologa vaikundhan aagiradhe


சிந்திக்க சிந்திக்கத் தித்திக்குதே

சிவசங்கரம் என்னும் தேன் ஊறுதே

வந்திக்க உலகம் முந்திடுதே

வாழ்த்தொலி எங்கும் முழங்கிடுதே


செங்கதிர் ஒளி பரவிடுதே

செங்கமல முகம் மலர்ந்திடுதே

சிம்மமாய்க் குரல் ஒலித்திடுதே

சிந்தை அடங்கி ஒடுங்கிடுதே


வானம் பூ மழை தூவிடுதே

வசந்தத்தின் குளிர் எங்கும் பரவிடுதே

மோன நிலை இங்கு சூழ்கிறதே - தொண்டர்

முத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றதே


வேங்கட மலை இங்கு காண்கிறதே

வெற்றிக் கரம் என்னை அழைக்கிறதே

சங்கம் உயர்ந்து ஒலிக்கின்றதே

சன்மார்க்கக் கொடி பறக்கின்றதே


ஆகாய கங்கை பொழிகின்றதே

ஆனந்த அலை பொங்கி எழுகின்றதே

அரவிந்த நேத்ரம் அழைக்கின்றதே

அமிர்தம் கரங்களில் சுரக்கின்றதே


சரணம் என மனம் கூவிடுதே

சாந்தி நிலை எங்கும் சூழ்கிறதே

கானங்கள் நெஞ்சுள் இனிக்கின்றதே

கண்களை நீர்த்திரை மறைக்கின்றதே


கோள்கள் அஞ்சி நடுங்கிடுதே

கொற்றவன் ஆணைக்கடங்கிடுதே

தாள்கள் தஞ்சம் தர அழைக்கின்றதே

தாரணியில் அன்பு தழைக்கின்றதே


சொர்க்கத்தின் கதவுகள் திறக்கின்றதே

சூழ்ந்த வினைகள் பறக்கின்றதே

பொற்கரம் என்னை அணைக்கின்றதே - இது

பூலோக வைகுந்தம் ஆகிறதே

 
 
 

Recent Posts

See All
Sanga thamizh naadu

Sanga thamizh naadu sei thavamo - Siva Shankaran thonriya vaibavamo thanga churangame ingutradho - inge dhaarmeega sindhai nilai petradho...

 
 
 
Sankatahara mangaladhara

Sankatahara mangaladhara pankaja charana shankarasudha kunjaramuka aanandha natana aadhi purusha jothi vadiva gnaana pooranaa amboruha...

 
 
 
Shankara nin sirippu

Shankara nin sirippu aanandha alai sirippu sathguruvae nin sirippu gnaanaththin sudar sirippu anbu manam arul surakkum nin sirippu -...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page