Shankaranin vaazhkkai oru
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Shankaranin vaazhkkai oru thirandha puththagam
sargunangalaal niraindha ariya inippagam
evaridamum kaiyaendhaa gunamae muththirai
yaeka chakraathipathi arulae sarkkarai
anbargalai thottu thazhuvum iniya thozhamai
aadhaara guru ivanin anbu aalugai
maandhargalin kuraigalellaam kaetkum porumai
mahaan ivar vaazhkkai nerigal eththanai semmai
vaedangal edhuvumillaa unmai thaththuvam
vetriyaiyae edhilum kaanum ivan magaththuvam
yaaga boomi namakku thandha punya chariththiram
yaar nenjum ezhudhi vaikkum anbu chiththiram
aandavanai edhilum kaanum arum perum thavam
aanandham thannil midhakkkum eliya sivam
thaandavangal aadum kaalgal eththanai vaegam
thaan yaerkkum karmaavaal thalaraa dhaegam
guruvaana murugan thandhatheththanai arivu
kulavu thamizh paechchilellaam thaththuva serivu
nambiyivan seidhadhellaam poorva poojanai
naa nilaththai uyarththudhalae naalum yosanai
சங்கரனின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்
சற்குணங்களால் நிறைந்த அரிய இனிப்பகம்
எவரிடமும் கையேந்தா குணமே முத்திரை
ஏக சக்ராதிபதி அருளே சர்க்கரை
அன்பர்களைத் தொட்டுத் தழுவும் இனிய தோழமை
ஆதார குரு இவனின் அன்பு ஆளுகை
மாந்தர்களின் குறைகளெல்லாம் கேட்கும் பொறுமை
மகான் இவர் வாழ்க்கை நெறிகள் எத்தனை செம்மை
வேடங்கள் எதுவுமில்லா உண்மைத் தத்துவம்
வெற்றியையே எதிலும் காணும் இவன் மகத்துவம்
யாக பூமி நமக்குத் தந்த புண்ய சரித்திரம்
யார் நெஞ்சும் எழுதி வைக்கும் அன்புச் சித்திரம்
ஆண்டவனை எதிலும் காணும் அரும் பெரும் தவம்
ஆனந்தம் தன்னில் மிதக்கும் எளிய சிவம்
தாண்டவங்கள் ஆடும் கால்கள் எத்தனை வேகம்
தான் ஏற்கும் கர்மாவால் தளரா தேகம்
குருவான முருகன் தந்ததெத்தனை அறிவு
குலவு தமிழ்ப் பேச்சிலெல்லாம் தத்துவச் செறிவு
நம்பியிவன் செய்ததெல்லாம் பூர்வ பூசனை
நாநிலத்தை உயர்த்துதலே நாளும் யோசனை
Comments