Shankaranin paadhaththai
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Shankaranin paadhaththai vanangiduvomae - Siva
Shankaranin naamaththai jebiththiduvomae
inbam varum thunbam varum
manidha vaazhkkaiyilae - adhai
koottuvadhum kuraippadhuvum
Shankaran kaiyilae - andha
iraivanaiyae adaindhu vittom
indha piraviyilae - ini
vaazhkkai muzhudhum midhandhiduvom
aanandha kanneerilae
paththu avadhaara chinnam
avan kaigalilae - andha
chandhiranum sooriyanum
avan kangalilae - avan
karunai kondu oru paarvai
namai paarkkaiyilae - nam
karma vinai theerndhu vidum
andha nodiyilae
சங்கரனின் பாதத்தை வணங்கிடுவோமே - சிவ
சங்கரனின் நாமத்தை ஜபித்திடுவோமே
இன்பம் வரும் துன்பம் வரும் மனித வாழ்க்கையிலே - அதை
கூட்டுவதும் குறைப்பதுவும் சங்கரன் கையிலே - அந்த
இறைவனையே அடைந்து விட்டோம் இந்தப் பிறவியிலே - இனி
வாழ்க்கை முழுதும் மிதந்திடுவோம் ஆனந்த கண்ணீரிலே
பத்து அவதார சின்னம் அவன் கைகளிலே - அந்த
சந்திரனும் சூரியனும் அவன் கண்களிலே - அவன்
கருணை கொண்டு ஒரு பார்வை நமைப் பார்க்கையிலே - நம்
கர்ம வினை தீர்ந்து விடும் அந்த நொடியிலே
コメント