Shankarane dheivam
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Shankarane dheivam Sivashankarane dheivam
annai enrae nee azhaiththaalum
thandhai enrae nee ninaiththaalum
aasaan enre nee madhiththaalum
sodharanaaga nee variththaalum
yetrukollum dheivamae
Shankaranae dheivame [Siva]
aadharavinri nee azhumpodhu
unai thaetri karaiyetruvaan
aanavaminri nee thozhumpodhu
unakkullae avan thonruvaan
irulagalaamalae mayangidum ullamae
oli tharum babavin karunaiyil vaarumae
saranam saranam saranam
uyirathan unnatham unil nee thaedinaal
irai thanmai pulanaagumae - ah
iraiyadhan maenmaiyai unarndhidum podhudhaan
arul vellam vazhindhodumae
arul mazhai pozhindhidum hariharan avanae
marul thanai neekkidum magesanum avanae
saranam saranam saranam
சங்கரனே தெய்வம் சிவசங்கரனே தெய்வம்
அன்னை என்றே நீ அழைத்தாலும்
தந்தை என்றே நீ நினைத்தாலும்
ஆசான் என்றே நீ மதித்தாலும்
சோதரனாக நீ வரித்தாலும்
ஏற்றுக்கொள்ளும் தெய்வமே
சங்கரனே தெய்வமே - சிவ
ஆதரவின்றி நீ அழும்போது
உனை தேற்றி கரையேற்றுவான்
ஆணவமின்றி நீ தொழும்போது
உனக்குள்ளே அவன் தோன்றுவான்
இருளகலாமலே மயங்கிடும் உள்ளமே
ஒளிதரும் பாபாவின் கருணையில் வாருமே
சரணம் சரணம் சரணம்
உயிரதன் உன்னதம் உனில் நீ தேடினால்
இறைத்தன்மை புலனாகுமே - ஆ
இறையதன் மேன்மையை உணர்ந்திடும் போதுதான்
அருள்வெள்ளம் வழிந்தோடுமே
அருள்மழை பொழிந்திடும் ஹரிஹரன் அவனே
மருள்தனை நீக்கிடும் மகேசனும் அவனே
சரணம் சரணம் சரணம்
Comments