Shankaran Nenja Gugai
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
சங்கரன் என் நெஞ்சக்குகை வந்தமர்ந்தானே
சந்தம் தந்து தன் வரவைச் சொல்ல வைத்தானே
பொங்கி வரும் பெருநிலவில் முகம் தெரிந்தானே
புத்தம் புது மலரிதழில் அவன் சிரித்தானே
வண்ணமய மாலைகளைச் சூடி நின்றானே
வார்த்தெடுத்த சித்திரமாய் அழகு கொண்டானே
கண்ணனவன் குறும்பு செய்து எனைக் கவர்ந்தானே
கண்களிலே கருணை மின்னக் காட்சி தந்தானே
அந்தரத்தில் பறந்த மனம் அடக்கி வைத்தானே
ஆணவத்தைத் தரையிறக்கிச் புதைத்து விட்டானே
மந்திரமாம் சொற்களிலே மயங்க வைத்தானே
மாயம் செய்து என் உணர்வி கலந்து விட்டானே
எந்நேரமும் தன் அன்பை நினைக்க வைத்தானே
இணை பிரியாத் தோழனெனத் தொடர்ந்து வந்தானே
சொந்த பந்தம் பொய்யென்று துறக்க வைத்தானே - தன்
சுந்தரமாம் சூபத்திலே சொக்க வைத்தானே
Comments