Shankaran naamamae
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Shankaran naamamae dhinamum naam kooravae
manadhilae inba thaenoorum
un mugam kaanavae en manam yengudhae
viraindhu nee arula vaaraayo
ullam kollai ponadhae Siva Sivaa
anbu mayamaanadhae Siva Sivaa
ullam kollai ponadhae Sivane Shankarane
yezhaayiram aandil oru muraidhaan
undhan dharisanam naan kandaen
manadhil eththanai aasaigal
ariyaayaa nee ariyaayaa
thaamarai un mugam kaanaththaan
vandugal naangal varuvom - un
anbai thaenaaga undu vittu
madhi mayangidhaan vizhuginrom
varandu kidakkum indha boomikku - anbu
neerum ootra nee vandhaaye
manangalellaam valam petridavae
seidhaayae sevai seidhaayae
undhan sevai seyya naangalumdhaan
vandhu nirkirom edhiril - un
paarvai engalmel pattavudan
paavam theerndhudhaan magizhuvom
சங்கரன் நாமமே தினமும் நாம் கூறவே
மனதிலே இன்பத் தேனூறும்
உன் முகம் காணவே என் மனம் ஏங்குதே
விரைந்து நீ அருள வாராயோ
உள்ளம் கொள்ளை போனதே சிவ சிவா
அன்பு மயமானதே சிவ சிவா
உள்ளம் கொள்ளை போனதே சிவனே சங்கரனே
ஏழாயிரம் ஆண்டில் ஒரு முறைதான்
உந்தன் தரிசனம் நான் கண்டேன்
மனதில் எத்தனை ஆசைகள்
அறியாயா நீ அறியாயா
தாமரை உன் முகம் காணத்தான்
வண்டுகள் நாங்கள் வருவோம் - உன்
அன்பைத் தேனாக உண்டு விட்டு
மதி மயங்கிதான் விழுகின்றோம்
வரண்டு கிடக்கும் இந்த பூமிக்கு - அன்பு
நீரும் ஊற்ற நீ வந்தாயே
மனங்களெல்லாம் வளம் பெற்றிடவே
செய்தாயே சேவை செய்தாயே
உந்தன் சேவை செய்ய நாங்களும்தான்
வந்து நிற்கிறோம் எதிரில் - உன்
பார்வை எங்கள்மேல் பட்டவுடன்
பாவம் தீர்ந்துதான் மகிழுவோம்
Comments