Shankaram Sivashankaram
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Shankaram Sivashankaram
Shankaram Sivashankaram
en karam adhil than karam - vaiththu
yetridum inba saagaram
iru karam konda eeshwaram - adhan
thirukkaram enakkoru varam
oru karam adhu valaikkaram - adhan
maru karam thiruppadhi karam
vidhikkaram ennai vizhungidum neram
viraindhidum ennai kaaththidum
nadhikkaram ennai nanaiththidum karam
alaikkaram konda saagaram
nidhikkaram arul nidhikkaram - porul
ninaiththadhum udan vazhangidum
thudhikkaram naan thozhum karam thannil
thoyththidum ennai seekkiram
சங்கரம் சிவசங்கரம் சங்கரம் சிவசங்கரம்
என் கரம் அதில் தன் கரம் - வைத்து
ஏற்றிடும் இன்ப சாகரம்
இரு கரம் கொண்ட ஈஷ்வரம் - அதன்
திருக்கரம் எனக்கொரு வரம்
ஒரு கரம் அது வளைக்கரம் - அதன்
மறுகரம் திருப்பதி கரம்
விதிக்கரம் என்னை விழுங்கிடும் நேரம்
விரைந்திடும் என்னை காத்திடும்
நதிக்கரம் என்னை நனைத்திடும் கரம்
அலைக்கரம் கொண்ட சாகரம்
நிதிக்கரம் அருள் நிதிக்கரம் - பொருள்
நினைத்ததும் உடன் வழங்கிடும்
துதிக்கரம் நான் தொழும்கரம் தன்னில்
தோய்த்திடும் என்னை சீக்கிரம்
Comentarios