top of page

Shankaram Siva Shankaram

  • SamratchanaLyrics
  • Feb 18, 2019
  • 1 min read

Shankaram Siva Shankaram - Om

Shankaram Siva Shankaram


kangalin oli shankaram - naan

kaanum yaavaiyum shankaram

panngalin oli shankaram - en

paadalin porul shankaram


en thiram adhu shankaram - sakala

yandhiram adhu shankaram

mandhiram adhu shankaram - sakala

thandhiram adhu shankaram


thaeduvaar thunai shankaram - enai

thaedi vandhadhum shankaram

naaduvaar thunai shankaram - naan

naadi vandhadhum shankaram


kanavilum Sivashankaram - enai

kaakkumae adhan senkaram

nanavilum Sivashankaram - enai

nannumo yama kinkaram


vaanagam tharum shankaram - idhu

vaiyagam varum shankaram

maanudam thozhum shankaram - sakala

maarkkamum Sivashankaram


aaranam adhu shankaram - adhan

karanam adhu shankaram

pooranam adhu shankaram - pari

pooranam Siva shankaram


Shankaram Siva Shankaram - puvi

engilum suba mangalam

Shankaram Siva Shankaram - om

shanthi shanthi Siva shankaram


சங்கரம் சிவசங்கரம் - ஓம்

சங்கரம் சிவசங்கரம்


கண்களின் ஒளி சங்கரம் - நான்

காணும் யாவையும் சங்கரம்

பண்களின் ஒலி சங்கரம் - என்

பாடலின் பொருள் சங்கரம்


என் திறம் அது சங்கரம் - சகல

யந்திரம் அது சங்கரம்

மந்திரம் அது சங்கரம் - சகல

தந்திரம் அது சங்கரம்


தேடுவார் துணை சங்கரம் - எனை

தேடி வந்ததும் சங்கரம்

நாடுவார் துணை சங்கரம் - நான்

நாடி வந்ததும் சங்கரம்


கனவிலும் சிவசங்கரம் - எனை

காக்குமே அதன் செங்கரம்

நனவிலும் சிவ சங்கரம் - எனை

நண்ணுமோ யம கிங்கரம்


வானகம் தரும் சங்கரம் - இது

வையகம் வரும் சங்கரம்

மானுடம் தொழும் சங்கரம் - சகல

மார்க்கமும் சிவ சங்கரம்


ஆரணம் அது சங்கரம் - அதன்

காரணம் அது சங்கரம்

பூரணம் அது சங்கரம் - பரி

பூரணம் சிவ சங்கரம்


சங்கரம் சிவ சங்கரம் - புவி

எங்கிலும் சுப மங்களம்

சங்கரம் சிவ சங்கரம் - ஓம்

சாந்தி சாந்தி சிவ சங்கரம்

 
 
 

Recent Posts

See All
Sanga thamizh naadu

Sanga thamizh naadu sei thavamo - Siva Shankaran thonriya vaibavamo thanga churangame ingutradho - inge dhaarmeega sindhai nilai petradho...

 
 
 
Sankatahara mangaladhara

Sankatahara mangaladhara pankaja charana shankarasudha kunjaramuka aanandha natana aadhi purusha jothi vadiva gnaana pooranaa amboruha...

 
 
 
Shankara nin sirippu

Shankara nin sirippu aanandha alai sirippu sathguruvae nin sirippu gnaanaththin sudar sirippu anbu manam arul surakkum nin sirippu -...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page