Shankara Yaar Kolo
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
சங்கரா யார் கொலோ சதுரர்?
சஞ்சலச் சுமைகளை உன் தோளில் ஏற்றி
சந்தோஷமே வாழ்க்கை என்றாகினோம்
அஞ்சல்என்ற உந்தன் வார்த்தையில்தானே
அளவிலா தைரியம் கொண்டு விட்டோம்
பந்தங்களைத் துறந்து வந்த உன்னை
சொந்தமென்று சுற்றி வளைத்துவிட்டோம்
அந்தமொடு ஆதியாய் நிற்கும் உன்னை
ஆன்மாவில் பின்னிப் பிணைத்து விட்டோம்
உபவாசமிருந்து நீ செய்த தவத்தில்
உயரிய பேறுகளை பெற்று விட்டோம்
பல வேஷம் கொண்டு நீ உலகில் வந்தாய்
உன் பாதம் தீண்டி பாவம் தீர்ந்துவிட்டோம்
வேண்டாத குணங்களை ஒதுக்க உழைத்தாய்
உன் வியர்வையில் பரிசுத்தமாகி விட்டோம்
வேண்டிய வரங்கள் நீ தந்ததனால்
வெற்றியின் விளிம்பினை தொட்டு விட்டோம்
அழுக்கான மனதை உன்பாதம் வைத்தோம்
அசுத்தங்கள் போக்கி நீ சுத்தி செய்தாய்
ஆர்ப்பாட்ட உலகிலே மயங்கி நின்றோம்
அமைதிப்பூங்காவாக ஆக்கி விட்டாய்
மேன்மைக்கு பொருள் அறியாதிருந்தோம்
நீ மென்மனத்தாலே திருப்பி விட்டாய்
அறியாமை இருளிலே மூழ்கி விட்டோம்
ஆற்றலால் அறிவில் சுடர் ஏற்றினாய்
நடந்து நடந்து நீ தடம் பதித்தாய்
அதில் நலுங்காமல் பயணம்
தொடர்ந்து விட்டோம்
படர்ந்து தழைத்த உன் அன்பில் மூழ்க
அடடா என்ன தவம் செய்து விட்டோம்
Commentaires