top of page

Shankara Sivashankara

  • SamratchanaLyrics
  • Feb 18, 2019
  • 2 min read

Shankara Sivashankara Sivashankara hara hara om

janaarthana hey janaarthana janaarthana hari om

Shankara Sivashankara Shankara hara hara om


kailaaya malaiyil vaasam seivaan shankara hara hara om

yezhumalaiyilae ezhundharul purivaan janaarthana hari om

vilva maalaiyai virumbi anivaan shankara hara hara om

thulasi thalaththai soodi magizhvaan janaarthana hari om


malaimagal manandha mahadhaevanae shankara hara hara om

alaimagal petra anbu kanavanae janaarthana hari om

vaama baagaththil dheviyai vaiththaan shankara hara hara om

vanidhaiyai idhaya koyilil vaiththaan janaarthana hari om


kaalaiyil yeri nagar valam varuvaan shankara hara hara om

garudan meedhu parandhu thirivaan janaarthana hari om

saambalai poosi shanthi adaivaan shankara hara hara om

chandhana kunkuma parimalam kolvaan janaarthana hari om


soolam mazhuvai aayudham kondaan shankara hara hara om

sangu chakkaram yendhiyiruppaan janaarthana hari om

netriyil neetraal kodugal iduvaan shankara hara hara om

neenda naamam anivadhil piriyan janaarthana hari om


aanaikkaavil neerul nirpaan shankara hara hara om

arangam thanilae urangi kidappaan janaarthana hari om

kaetta varaththai koduththu vizhippaan shankara hara hara om

koduththa varaththai keduththu kaappaan janaarthana hari om


puliththol aadai poondu thirivaan shankara hara hara om

peethaambaraththai uduththi magizhvaan janaarththana hari om

bitchai eduththu dhinamum unbaan shankara hara hara om

atchaya paaththiram naanae enbaan janaarthana hari om




சங்கரா சிவசங்கரா சிவசங்கர ஹர ஹர ஓம்

ஜனார்த்தனா ஹே ஜனார்த்தனா ஜனார்த்தனா ஹரி ஓம்


கைலாய மலையில் வாசம் செய்வான் சங்கர ஹர ஹர ஓம்

ஏழுமலையிலே எழுந்தருள் புரிவான் ஜனார்த்தனா ஹரி ஓம்

வில்வ மாலையை விரும்பி அணிவான் சங்கர ஹர ஹர ஓம்

துளசி தளத்தைச் சூடி மகிழ்வான் ஜனார்த்தனா ஹரி ஓம்


மலைமகள் மணந்த மஹாதேவனே சங்கர ஹர ஹர ஓம்

அலைமகள் பெற்ற அன்புக் கணவனே ஜனார்த்தனா ஹரி ஓம்

வாம பாகத்தில் தேவியை வைத்தான் சங்கர ஹர ஹர ஓம்

வனிதையை இதய கோயிலில் வைத்தான் ஜனார்த்தனா ஹரி ஓம்


காளையில் ஏறி நகர் வலம் வருவான் சங்கர ஹர ஹர ஓம்

கருடன் மீது பறந்து திரிவான் ஜனார்த்தனா ஹரி ஓம்

சாம்பலை பூசி சாந்தி அடைவான் சங்கர ஹர ஹர ஓம்

சந்தன குங்கும பரிமளம் கொள்வான் ஜனார்த்தனா ஹரி ஓம்


சூலம் மழுவை ஆயுதம் கொண்டான் சங்கர ஹர ஹர ஓம்

சங்கு சக்கரம் ஏந்தியிருப்பான் ஜனார்த்தனா ஹரி ஓம்

நெற்றியில் நீற்றால் கோடுகள் இடுவான் சங்கர ஹர ஹர ஓம்

நீண்ட நாமம் அணிவதில் பிரியன் ஜனார்த்தனா ஹரி ஓம்


ஆனைக்காவில் நீருள் நிற்பான் சங்கர ஹர ஹர ஓம்

அரங்கம் தனிலே உறங்கிக் கிடப்பான் ஜனார்த்தனா ஹரி ஓம்

கேட்ட வரத்தைக் கொடுத்து விழிப்பான் சங்கர ஹர ஹர ஓம்

கொடுத்த வரத்தைக் கெடுத்துக் காப்பான் ஜனார்த்தனா ஹரி ஓம்


புலித்தோல் ஆடை பூண்டு திரிவான் சங்கர ஹர ஹர ஓம்

பீதாம்பரத்தை உடுத்தி மகிழ்வான் ஜனார்த்தனா ஹரி ஓம்

பிட்சை எடுத்துத் தினமும் உண்பான் சங்கர ஹர ஹர ஓம்

அட்சய பாத்திரம் நானே என்பான் ஜனார்த்தனா ஹரி ஓம்




 
 
 

Recent Posts

See All
Sanga thamizh naadu

Sanga thamizh naadu sei thavamo - Siva Shankaran thonriya vaibavamo thanga churangame ingutradho - inge dhaarmeega sindhai nilai petradho...

 
 
 
Sankatahara mangaladhara

Sankatahara mangaladhara pankaja charana shankarasudha kunjaramuka aanandha natana aadhi purusha jothi vadiva gnaana pooranaa amboruha...

 
 
 
Shankara nin sirippu

Shankara nin sirippu aanandha alai sirippu sathguruvae nin sirippu gnaanaththin sudar sirippu anbu manam arul surakkum nin sirippu -...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page