Shankara shankara siva siva
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Shankara shankara siva siva shankara
engal naayaganae - aiya
un naamam en naavil enrum olikkudhaiyaa
aiya sarnam baba saranam
urugidum nenjil ezhuginra moochil
varuvaay Shankranae
vaaraay vaaraay enrum vaaraay
kailai naayaganae - aiya
pudhu raagam pudhu gaanam
pudhusaay kaetkudhaiyaa
paarkka paarkka paravasamoottum
engal naayaganae - aiya
sondham bandham ellaam neeyae
sindhaiyil kudi kolvaay
thaaraay thaaraay arivai thaaraay
ambigai naayaganae - aiya
pillaigal engal pizhagalai poruththu
emmai kaaththarulvaay
hari narayana baja govindha
vaikunda vaasa - aiya
vaenkata varadha malai govindha
abayam thandharulvaay
pandarinadha paapa vimochana
karuna saagaranae - aiya
gaanavilasa dheena charanyaa
kuraigal theerththarulvaay
சங்கர சங்கர சிவ சிவ சங்கர எங்கள் நாயகனே - ஐயா
உன் நாமம் என் நாவில் என்றும் ஒலிக்குதையா
ஐயா சரணம் பாபா சரணம்
உருகிடும் நெஞ்சில் எழுகின்ற மூச்சில் வருவாய் சங்கரனே
வாராய் வாராய் என்றும் வாராய் கைலை நாயகனே - ஐயா
புது ராகம் புது கானம் புதுசாய் கேட்குதையா
பார்க்க பார்க்க பரவசமூட்டும் எங்கள் நாயகனே - ஐயா
சொந்தம் பந்தம் எல்லாம் நீயே சிந்தையில் குடி கொள்வாய்
தாராய் தாராய் அறிவைத் தாராய் அம்பிகை நாயகனே - ஐயா
பிள்ளைகள் எங்கள் பிழைகளை பொறுத்து எம்மைக் காத்தருள்வாய்
ஹரி நாராயணா பஜகோவிந்தா வைகுண்டவாசா - ஐயா
வேங்கட வரதா மலை கோவிந்தா அபயம் தந்தருள்வாய்
பண்டரிநாதா பாபவிமோசன கருணாசாகரனே - ஐயா
கானவிலாசா தீனசரண்யா குறைகள் தீர்த்தருள்வாய்
Комментарии