Shankara nin sannidhi
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Shankara nin sannidhi varubavar kodi
sanjalangal theerndhu selbavar kodi
pongum kanneer peruga panibavar kodi
poorippil maeni silippavar kodi
saranam saranam ena veezhbavaar kodi
saastha un saannithyam kandavar kodi
tharunam arindhu nee azhaththavargal kodi
tharuginra arulil palan petravarum kodi
anniya naatinarkkum arul seidhaay kodi
avar konda mana baaram yetradhum kodi
punniya nin saevai kodiyo kodi
poovulagil nin avadhaarangal kodi
tharkolai ennangal thavirththadhum kodi
thanjamena vandhaarai thaangiyadhum kodi
dhaevanae unnaal thirundhiyavar kodi - unai
thaedi vara yaam seidha thavangalo kodi
aram uraiththu arul vazhi koottiyadhu kodi
anbu seidhu than vasam kavarndha manam kodi
varu sogam thavirhthtu nee vaazhthiyadhum kodi
vaaraadhavarkkum arul vazhanguvaay kodi
vinaigal agatriyadhum kodiyo kodi
vyadhigal theerththadhum kodi pala kodi
ullaththil unai kandaar aayiram kodi
un anbai solla naa vendum pala kodi
சங்கரா நின் சந்நிதி வருபவர் கோடி
சஞ்சலங்கள் தீர்ந்து செல்பவர் கோடி
பொங்கும் கண்ணீர் பெருகப் பணிபவர் கோடி
பூரிப்பில் மேனி சிலிர்ப்பவர் கோடி
சரணம் சரணம் என வீழ்பவர் கோடி
சாஸ்தா உன் சாந்நித்யம் கணடவர் கோடி
தருணம் அறிந்து நீ அழைத்தவர்கள் கோடி
தருகின்ற அருளில் பலன் பெற்றவரும் கோடி
அந்நிய நாட்டினர்க்கும் அருள் செய்தாய் கோடி
அவர் கொண்ட மனப்பாரம் ஏற்றதும் கோடி
புண்னிய நின் சேவை கோடியோ கோடி
பூவுலகில் நின் அவதாரங்கள் கோடி
தற்கொலை எண்ணங்கள் தவிர்த்தது கோடி
தஞ்சமென வந்தாரைத் தாங்கியதும் கோடி
தேவனே உன்னால் திருந்தியவர் கோடி - உனைத்
தேடிவர யாம் செய்த தவங்களோ கோடி
அறம் உரைத்து அருள்வழி கூட்டியது கோடி
அன்பு செய்து தன் வசம் கவர்ந்த மனம் கோடி
வருசோகம் தவிர்த்து நீ வாழ்த்தியதும் கோடி
வாராதவர்க்கும் அருள் வழங்குவாய் கோடி
வினைகள் அகற்றியதும் கோடியோ கோடி
வியாதிகள் தீர்த்ததும் கோடி பல கோடி
உள்ளத்தில் உனைக் கண்டார் ஆயிரம் கோடி
உன் அன்பைச் சொல்ல நா வேண்டும் பல கோடி
Comments