Shankara nee malaiththaen
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Shankara nee malaiththaen - unai
sandhiththadhum malaiththaen - nee
arpudha narsuvaiththaen - un
anbinai naan suvaiththaen
vannangalai kuzhaiththaen - un
vadivazhagai izhaiththaen
ennangalai thoduththaen
iraivaa un mun isaiththaen
perunidhi unai unarndhaen
paetrinaal kavi punaindhaen - nee
arulneri tharum narunthaen - yaan
adhaiyanri vaerarundhaen
uravugalai thurandhaen
un nizhalil sirandhaen
oozhvinagal tholaindhaen
uyariya padham adaindhaen
konji unai azhaiththaen
kural koduththaay thigaiththaen
manjam onru amaiththaen - en
madi amarndhaay silirththaen
manam thirundha azhudhaen
manniththaay padham thozhudhaen - nenjil
ganam kuraindhu siriththaen - nee
kai koduththaay pizhaiththaen
சங்கரா நீ மலைத்தேன் - உனை
சந்தித்ததும் மலைத்தேன் - நீ
அற்புத நற்சுவைத்தேன் - உன்
அன்பினை நான் சுவைத்தேன்
வண்ணங்களைக் குழைத்தேன் - உன்
வடிவழகை இழைத்தேன்
எண்ணங்களைத் தொடுத்தேன்
இறைவா உன் முன் இசைத்தேன்
பெருநிதி உனை உணர்ந்தேன்
பேற்றினால் கவி புனைந்தேன் - நீ
அருள்நெறி தரும் நறுந்தேன் - யான்
அதையன்றி வேறருந்தேன்
உறவுகளைத் துறந்தேன்
உன் நிழலிற் சிறந்தேன்
ஊழ்வினகள் தொலைந்தேன்
உயரிய பதம் அடைந்தேன்
கொஞ்சி உனை அழைத்தேன்
குரல் கொடுத்தாய் திகைத்தேன்
மஞ்சம் ஒன்று அமைத்தேன் - என்
மடியமர்ந்தாய் சிலிர்த்தேன்
மனம் திருந்த அழுதேன்
மன்னித்தாய் பதம் தொழுதேன் - நெஞ்சில்
கனம் குறைந்து சிரித்தேன் - நீ
கை கொடுத்தாய் பிழைத்தேன்
Comments