Saththiya thaththuvame
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Saththiya thaththuvame sanmaarga puththagame
niththiya yauvaname madhdhiya kailaasame
iththarai meiththavame illaraththu thuravarame
chiththirai pooraname silirththezhundha naaraname
putrinil poo naagame punsirippin moganame
netri nadu theekkolame neri padaiththa aachaarame
katra kavi nayame kaaviyaththin oaviyame
patrarukkum senchivame paramalikkum shankarame
kandariyaa vignaaname karai kaanaa mei gnaaname
vindariyaa vakkiyame vilakkavonaa adhisayame
kuraivillaa pokkishame kuraiyillaa isai mayame
varaiyilaa vara balame vaaraadhu vandha shankarame
சத்திய தத்துவமே சன்மார்க்கப் புத்தகமே
நித்திய யௌவனமே மத்திய கைலாசமே
இத்தரை மெய்த்தவமே இல்லறத்துத் துறவறமே
சித்திரைப் பூரணமே சிலிர்த்தெழுந்த நாரணமே
புற்றினில் பூநாகமே புன்சிரிப்பின் மோகனமே
நெற்றி நடு தீக்கோளமே நெறி படைத்த ஆசாரமே
கற்ற கவிநயமே காவியத்தின் ஓவியமே
பற்றருக்கும் செஞ்சிவமே பரமளிக்கும் சங்கரமே
கண்டறியா விஞ்ஞானமே கரை காணா மெய்ஞானமே
விண்டறியா வாக்கியமே விளக்கவொண்ணா அதிசயமே
குறைவில்லா பொக்கிஷமே குறையில்லா இசை மயமே
வரையிலா வரபலமே வாராது வந்த சங்கரமே
Comments