Saththamillaamal Oru
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
சத்தமில்லாமல் ஒரு சாம்ராஜ்யம் நடக்குது - ஏக
சக்கரவர்த்தி சிவ சங்கரம் அதை ஆளுது
சுத்தமோ சுத்தமாக எவ்விடமும் காணுது
சொர்க்கமிதில் எங்கெங்கும் சுகந்த மணம் வீசுது
மொத்தமாய் கூடி வாழ உலகத்தையே அழைக்குது
மெத்தனம் கொள்ளாதே எச்சரிக்கை செய்யுது
அத்துப்படியானதுபோல் தினமும் வேலை நடக்குது
அத்துமீறும் செயல் எதையும் அனுமதியாதது
சொந்த பந்தமாக அன்பு செலுத்தி மக்கள் வாழுறார்
எந்தவித பேதமும் உள் நுழையாது காக்கிறார்
முந்து முந்து எனக்கூவி இந்த மூலபண்டாரம் அழைக்கிறார்
அத்தனை பேர்க்கும் அருள் வாரி வாரி தருகிறார்
அந்நிய நாட்டிலுமிந்த ஆலமரம் விழுதூன்றுது
புண்ணிய பாரதத்தின் புகழ் எங்கும் முழங்குது
கண்ணியன் சங்கரனார் கலியும் பலம் ஏற்குது
காவியம் யாவையும் இதை பொன்னேட்டில் பதிக்குது
Comentarios