Sarva Vedha Saara Rama
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
சர்வ வேத சார ராமா சமஸ்த தேவ ரூப ராமா
சங்கராவதார ராமா சர்வபரித்யாக ராமா
தர்ம பரிபால ராமா தாசரதே ரகு ராமா
நிர்மல ஸ்படிக ராமா நீரஜ நயன ராமா
அந்தர்யாமி ஸ்ரீ ராமா ஆத்ம நிவாஸி ராமா
மந்தஹாஸ முக ராமா மாமவ பட்டாபி ராமா
சுந்தர ஸ்ரீ ஜெயராமா சுரமுனி ஸேவித ராமா
சுலப சுசீல ராமா ஸ்ரீ சிவசங்கரா ராமா
நானழைக்கும் போதினிலே வருவாயோ
நாவினிக்க ஆசிகளைத் தருவாயோ
ஏன் எதற்கு என்ரும் நீ கேட்பாயோ
ஏழை முகம் நீ நினைந்து பார்ப்பாயோ
ஊடலுக்கும் காரணத்தை சொல்வாயோ
உருகி நிற்கும் என் இதயம் அறிவாயோ
வாடி நிற்க சங்கரா நீ பொறுப்பாயோ
வரமளிக்க உடன் ஓடி வாராயோ
Comments