Sarva avadhaaranae
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Sarva avadhaaranae Sivashankar
sakala paraakramanae - Baba
karma vinai azhikkum maaya kannapiraan ivanae
dharmam nalindhadhanaal meendum thaarani vandhavanae
angusa raegai kondaan aanai mugan ivanae
annai kai vel varaindhaan azhagan shanmuganae
soolam yendhi vandhaan sivashakthi swaroopanumae
mazhuvinai kai pidiththaan mahadhevan ivanae
vil ambu chinnam kondaan aiyan vanpuli vaagananae
meen aamai kudaiyum kondaan thiru maalavan vaenkatanae
kodhandam yendhi vandhaan kosala raamanumae
sangu chakaram thariththaan saatchaath naaraayananae
சர்வ அவதாரனே - சிவசங்கர்
சகல பராக்ரமனே - பாபா
கர்ம வினை அழிக்கும் மாயக் கண்ணபிரான் இவனே
தர்மம் நலிந்ததனால் மீண்டும் தாராணி வந்தவனே
அங்குச ரேகை கொண்டான் ஆனை முகன் இவனே
அன்னை கைவேல் வரைந்தான் அழகன் ஷண்முகனே
சூலம் ஏந்தி வந்தான் சிவசக்தி ஸ்வரூபனுமே
மழுவினைக் கை பிடித்தான் மஹாதேவன் இவனே
வில் அம்பு சின்னம் கொண்டான் ஐயன் வன்புலி வாகனனே
மீன் ஆமை குடையும் கொண்டான் திருமாலவன் வேங்கடனே
கோதண்டம் ஏந்தி வந்தான் கோசல ராமனுமே
சங்கு சக்ரம் தரித்தான் சாட்சாத் நாராயணனே
Comments