Saptha Swarangalile
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
ஸப்த ஸ்வரங்களிலே சிரிக்கின்றாள் - சங்கரி
சங்கீத மயமாக ஜ்வலிக்கின்றாள்
நித்ய கல்யாணியென விளங்குகின்றாள் - மனம்
நெகிழ்த்தும் சரசாங்கி ஆகின்றாள் சங்கரி
ஆனந்த பைரவியில் பாடுகின்றாள்
அமிர்த வர்ஷிணி என பொழிகின்றாள்
மோகனத்தால் உள்ளம் கவருகின்றாள் - ஜகன்
மோகினி நம் மனதை ஆளுகின்றாள்
கதன குதூகலத்தில் ஆழ்த்துகின்றாள்
கானடா பாடியே அழைக்கின்றாள்
மதன மனோஹரியாய் ஆடுகின்றாள்
மரகத சுந்தரியாய்க் காணுகின்றாள்
சாருகேசி என குழைகின்ராள்
சங்கர ஆபரணம் பூணுகின்றாள்
தர்பாரிலே ஆட்சி நடத்துகின்றாள் - எனைத்
தாலாட்ட நீலாம்பரி பாடுகின்றாள் - சங்கரி
Comments