Samratchanaavil Shanthi
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
சம்ரட்சணாவில் சாந்தி கிடைக்கிற காரணம் உனக்குத் தெரியுமா
சஙகரம் என்றொரு மந்திரம் அங்கே முழங்குற விஷயம் தெரியுமா
ஆனந்த வானிலே காற்றாடிகள் போலே ஆடிப்பாடுறாரே தெரியுமா
அன்பெனும் நூலிலே கட்டியிருக்குது அந்த சேதி தெரியுமா
ஆசை எனும் மாயை அகன்று அங்கே ஞானியர் போலானார் தெரியுமா
ஆவல் கொள் முக்தியில் என்ற சங்கரன் அறிவுரையால்தான் தெரியமா
விட்டுபிடிக்கிற குணங்கள் அங்கே விரவியிருப்ப;து தெரியுமா
விடாமல் பற்று எந்தன் கொள்கைகளை என்ற சொல்லாலே தெரியுமா
கண்களைமூடி சிறுவரும் கூட நிஷ்டையில் ஆழுறார் தெரியுமா
கண்ணுக்குள் நிற்கும் சங்கரன் ஓடிவிடுவானோ என்றுதான் தெரியுமா
ஓடித்திரிந்த மனங்களெல்லாம் இங்கே ஒன்றாய்ப் பிணைந்தது தெரியுமா
தேடித்திரிந்த பரமாத்மா கண்ணால் தேக்கிப் பிணைத்தது தெரியுமா
வந்தவரை இங்கு உபசரிப்பது போல் வரலாறே இல்லை தெரியுமா - ஏதோ
பந்தமிருப்பதால் வந்தவரே என்ற பாச உணர்வுதான் தெரியுமா
நித்த நித்தம் வரும் புத்தம் புதியோரும் நினைந்து உருகுறார் தெரியுமா
சத்தமிட்ட பல சாத்தான் குணங்கள் சந்தடி அற்றது தெரியுமா
காந்தம்போல் நமைக்கவர்ந்து இழுக்கும் காரணம் என்ன தெரியுமா
சாந்தம் தவழும் சங்கரனில் மனம் சங்கமமானது தெரியுமா
சொந்த பந்தங்கள் மறந்துபோகிற சூட்சுமம் என்ன தெரியுமா - இவன்
சுந்தர முகமே சிந்தை முழுதும் நிரம்பிப் போனதால் தெரியுமா
コメント