top of page

Lakshmiyai oru karam

  • SamratchanaLyrics
  • Feb 18, 2019
  • 1 min read

Lakshmiyai oru karam anaithirukka

ratchanam thirukkaiyil thandhirukka

latchanamaay sangu chakram kaiyirukka - en

latchiyam unnai yaan kandu konden


iru kaalai en nenjiruththi vida

oru kaalil ninru thavam purindhen

pala kaalum pallaandu paadi ninren - enai

oru kaalum kanna nee maravaadhiru


syaamalamaam meni kondavanaam

thaamaraiyaay kangal malarndhavanaam

raamanaay raavananai samhariththaan

vaamananaay ivan ulagalandhaan


malindhulla kodumaigal maayndhidavum

nalindhitta dharmangal oangidavum - mana

valiyai agatridum maa maarundhaay

kaliyugam thannile avadhariththaan


solginra vedhathin suvaigalellaam

nalginaan gethaiyin naayaganaay

velginra kudhirai meleri varum

kalki avadhaaran Sivashankarane


லக்ஷ்மியை ஒரு கரம் அணைத்திருக்க

ரட்சணம் திருக்கையில் தந்திருக்க

லட்சணமாய் சங்கு சக்ரம் கையிருக்க - என்

லட்சியம் உன்னை யான் கண்டு கொண்டேன்


இரு காலை என் நெஞ்சிருத்தி விட

ஒரு காலில் நின்று தவம் புரிந்தேன்

பலகாலும் பல்லாண்டு பாடி நின்றேன் - எனை

ஒரு காலும் கண்ணா நீ மறவாதிரு


ச்யாமளமாம் மேனி கொண்டவனாம்

தாமரையாய் கண்கள் மலர்ந்தவனாம்

ராமனாய் ராவணனை ஸம்ஹரித்தான்

வாமனனாய் இவன் உலகளந்தான்


மலிந்துள்ள கொடுமைகள் மாய்ந்திடவும்

நலிந்திட்ட தர்மங்கள் ஓங்கிடவும் - மன

வலியை அகற்றிடும் மா மருந்தாய்

கலியுகம் தன்னிலே அவதரித்தான்


சொல்கின்ற வேதத்தின் சுவைகளெல்லாம்

நல்கினான் கீதையின் நாயகனாய்

வெல்கின்ற குதிரை மேலேறி வரும்

கல்கி அவதாரன் சிவசங்கரனே


 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page