Kumbida Vendaam
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Kumbida Vendaam saami kumbida vendaam - endha
kovilukkum senru nee kumbida vendaam manidha
koduthadhellaam ninaithu kondu
kodi nanri koori kondu
aduththa nodiyil azhaiththa podhum
avanai serum manam irundhaal
adiththavarai anaiththu kollum
abarimidha anbirundhaal
mudindhavarai nanmai seyyum
muzhumaiyaana uzhaippirundhaal
kadindhavarum oadi vandhu
kaaladiyil vizhundhu vittaal
kadum thavaththil un udalum
kaaya kalpamaagi vittaal
thannai thaane unarndhu vittaal
thalaivanaiyum arindhu vittaal
unnai pola pirar uyirum
uyarndhadhena madhithu vittaal
innum enna ulladhenru
ellaam thaan mudindhadhenru
mannu pugazh Sivashankaran
mana nilaiyil nee irundhaal
kumbiduvaargal saami kumbiduvaargal - unnai
kovilgalil vaiththu kumbiduvaargal manidha
கும்பிட வேண்டாம் சாமி கும்பிட வேண்டாம் - எந்த
கோவிலுக்கும் சென்று நீ கும்பிட வேண்டாம் மனிதா
கொடுத்ததெல்லாம் நினைத்துக் கொண்டு கோடி நன்றி கூறிக் கொண்டு
அடுத்த நொடியில் அழைத்தபோதும் அவனைச் சேரும் மனமிருந்தால்
அடித்தவரை அணைத்துக் கொள்ளும் அபரிமித அன்பிருந்தால்
முடிந்தவரை நன்மை செய்யும் முழுமையான உழைப்பிருந்தால்
கடிந்தவரும் ஓடி வ்ந்து காலடியில் விழுந்துவிட்டால்
கடுந்தவத்தில் உன் உடலும் காயகல்பமாகி விட்டால்
தன்னைத்தானே உணர்ந்துவிட்டால் தலைவனையும் அறிந்துவிட்டால்
உன்னைப்போல பிறர் உயிரும் உயர்ந்ததென மதித்து விட்டால்
இன்னும் என்ன உள்ளதென்று எல்லாம்தான் முடிந்ததென்று
மன்னுபுகழ் சிவசங்கரன் மனநிலையில் நீ இருந்தால்
கும்பிடுவார்கள் சாமி கும்பிடுவார்கள் - உன்னை
கோவில்களில் வைத்து கும்பிடுவார்கள் மனிதா
Comments